ஜியோவின் போட்டியை சமாளிக்க பல்வேறு நிறுவனங்களும் விலைக்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், ஜியோ பைபர் திட்டத்தை சமாளிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் எஃப்டிடிஎச் திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் எஃப்டிடிஎச் (பைபர் டூ ஹோம்) என்கிற அதிவேக இண்டர்நெட் சேவையை அளித்து வருகிறது. தற்போது இந்தியாவின் 1,100 நகரங்களில் ஜியோ நிறுவனம் தனது ஜிகா பைபர் திட்டத்தை தொடங்க உள்ளது. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடி விலைக்குறைப்பில் இறங்கியுள்ளது.
3,999, 5,999, 9,999 மற்றும் 16,999 ரூபாய்க்கு வழங்கப்படும் திட்டங்களில் இணைய வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,999 ரூபாய் கட்டினால் 300ஜிபி 20எம்பிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும், 5,999 ரூபாய் கட்டினால் 600 ஜிபி 60 எம்பிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 9,999 ரூபாய்க்கு 1000 ஜிபியும், 16,999 ரூபாய்க்கு 2000 ஜிபி 80 எம்பிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் எஃப்டிடிஎச் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஜியோ நிறுவனத்தில் ஜிகா பைபர் திட்டம் இந்த மாதம் அறிமுகமாக உள்ளது. இதில், 1ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் டிவியில் துல்லியமாக வாடிக்கையாளர்கள் படங்களைக் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்