வாடிக்கையாளர் தற்போது சந்தா செலுத்தியுள்ள பேக்கில் குறிப்பிட்டுள்ளதை விட நாளுக்கு இரண்டு ஜி.பி அளவுக்கு 4ஜி டேட்டா வழங்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ புதிய ஆட்-ஆன் பேக்கினை அறிவித்துள்ளது. தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் My Jio செயலியில் இச்சலுகை காணப்படும். எதன் அடிப்படையில் இச்சலுகை குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்ற விவரம் தெரியவில்லை. மேலும் அந்த ஆட்-ஆன் பேக்கில் கூடுதல் அழைப்புகள், எஸ்.எம்.எஸ் சலுகைகள் எதுவும் இல்லை. இதன் வேலிடிட்டி ஜூலை 31-வரை மட்டுமே.
இந்தப் புதிய டிஜிட்டல் பேக்கோடு, ஜியோ வாடிக்கையாளர் ஒருவர் ரூ.399 பிளானுக்கு சந்தா கட்டியிருந்தால், அதில் அவர் வழக்கமாகப் பெறும் ஒரு நாளுக்கு 1.5 ஜி.பியுடன் 2 ஜி.பி சேர்த்து 3.5 ஜி.பி பயன்படுத்தலாம். எனினும் ஜூலை-31 வரையே இச்சலுகை என்பதால் இதனால் பெரிதும் பயன் இருக்காது. டெலிகாம் டாக் அறிக்கையின் சில கமெண்டுகள், இச்சலுகை ஆகஸ்ட்-2 வரை நீடிக்கும் என்று குறிப்பிடுகின்றன.
முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் ஜியோ ஃபோன் மழைக்கால ஹங்காமா ஆஃபர் என்ற சலுகையை அறிவித்திருந்தது. இதன் படி தங்கள் பழைய பேசிக் ஃபோன்களைக் குடுத்து எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் புதிய ஜியோ போனினை ரூ.501-க்குப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இத்தொகை முழுமையாகத் திருப்பி அளிக்கக்கூடிய வைப்புத்தொகை ஆகும். எனினும் ஆறு மாதத்துக்கு 99 ரூ பேக்கினை ரீசார்ஜ் செய்தால் தான் இச்சலுகையைப் பெற முடியும். ஆக, இதற்கு 1095 ரூ (501ரூ வைப்புத்தொகை + 594ரூ ரீசார்ஜ்) கட்டவேண்டும். 99 ரூ ரீசார்ஜ் பிளானின் படி நாளொன்றுக்கு 0.5 ஜி.பி டேட்டா, அளவற்ற இலவச குரல் அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்