ஃபைபர் நெட்வொர்க்கில் கலக்கி வரும் ஜியோ ஃபைபர் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜீ5 ப்ரீமியத்தை இலவசமாக அளித்துள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் அமேசான் ப்ரைம் ஓராண்டு பயன்பாட்டை ஜியோ ஃபைர் தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்திருந்தது.
ஜீ5 ப்ரீமியமை பொருத்தளவில் 4,500க்கும் அதிகமான படங்கள், 120க்கும் அதிகமான ஜீ5 ஒரிஜினல் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் உள்ளன.
12 மொழிகளில் செமையான என்டர்டெய்ன்மென்ட்டை இந்த ஜீ5 ப்ரீமியம் அளித்து வருகிறது.
ஜியோ ஃபைபர், ஜீ5, ஜியோ டிவி உள்ளிட்டவை விரைவில் செட் டாப் பாக்ஸாக அளிக்கப்படவுள்ளது.
ஜீ5 ப்ரீமியத்தின் மாதாந்திர சந்தா ரூ. 99 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஃபைபரில் சில்வர் அல்லது அதற்கு அதிகமான ப்ளானில் இருப்பவர்களுக்கு ஜீ5 ப்ரீமியம் இலவசமாக அளிக்கப்படுகிறது. ஜியோ ஃபைபர் சில்வர் ப்ளான் ரூ. 849 ஆகும்.
இதனை வீட்டில் ஆப் வழியே டிவி மூலமாக ஜீ5 ப்ரீமியத்தை பார்த்து மகிழலாம்.
லாக்டவுனில் ஜீ5 ப்ரீமியத்தின் சந்தாதாரர்கள் கணிசமாக அதிகரித்துள்ளனர் என்றும், இதனால் ஜியோவுடன் இணைந்து இந்த சிறப்பு சலுகைகளை அளிப்பதாகவும் ஜீ5 இந்தியா நிறுவனத்தின் வர்த்தக பிரிவு துணைத் தலைவர் மன்ப்ரீத் பும்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம்தான் ஜியோ ஃபைபரில் கோல்டு மற்றும் அதற்கு மேல்தரமான ஜியோ ஃபைர் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் ஓராண்டுக்கான சந்தா இலவசம் என்று அறிவிக்கப்பட்டது.
ஏர்டெல்லுடனும் ஜீ5 தனது வர்த்தகத்தை விரிவாக்கியுள்ளது. ஏர்டெல் சந்தாதாரர்கள் ரூ. 149 மற்றும் அதற்கு மேல் உள்ள ரீசார்ஜ் ப்ளான்களை பயன்படுத்தி ஜீ5 ப்ரீமியத்தை இலவசமாக பார்த்து மகிழலாம்.
Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்