இன்று அறிமுகமாகும் Jio GigaFiber திட்டம்: முழு சலுகை விவரங்கள் இதோ!

விளம்பரம்
Written by Gaurav Shukla மேம்படுத்தப்பட்டது: 6 செப்டம்பர் 2019 12:06 IST
ஹைலைட்ஸ்
  • Jio Fiber திட்டம் குறித்த தகவல்கள் இன்று வெளியிடப்படவுள்ளது
  • Reliance Jio 4K செட்-டாப் பாக்ஸையும் இலவசமாக வழங்கவுள்ளது
  • Jio Home Phone லேண்ட்லைன் சேவைகளும் இலவசம்

இந்தியாவில் 1600க்கு மேற்பட்ட நகரங்களில் Jio GigaFiber திட்டம் இன்று அறிமுகமாகவுள்ளது.

இறுதியாக ஜியோ ஜிகா பைபர் (Jio GigaFiber Plan) திட்டம் இந்தியாவில் இன்று அறிமாகிறது. கடந்த மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனங்களின் ஆண்டு சந்திப்பில் அறிவித்தபடி, இந்தியாவில் 1600க்கு மேற்பட்ட நகரங்களில் இன்று அறிமுகமாகவுள்ளது. இந்த சேவை இன்னும் சில மணி நேரங்களில் அறிமுகமாகவுள்ள நிலையில், இந்த சேவை பற்றிய பல தகவல்கள் மர்மமாகவே உள்ளது. திட்ட சிறப்பம்சங்கள், சேவைகள் பற்றி எந்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில், இதுவரை ஜியோ ஜிகா பைபர் குறித்து வெளியான தகவல்கள் இதோ!

கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட முக்கியமான அறிவிப்பு எது என்றால், இந்த ஜியோ பைபர்தான். ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி ஜியோ பைபர் அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 5 தேதி அறிமுகமாகும் என குறிப்பிட்டார். இந்த சேவையின் சோதனையை கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கியது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இந்த திட்டம் குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் தற்போது 100Mbps வேகத்தில் அறிமுகமாகியுள்ள இந்த சேவை, விரைவில் 1Gbps வேகம் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜியோ பைபர் விலை மற்றும் அறிமுக சலுகை!

மாதத்திற்கு 700 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை பல விதமான சேவை விலைகளில் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, இந்த ஜியோ ஜிகாபைபர் சேவைக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இந்தியாவில் தற்போது 100Mbps வேகத்தில் அறிமுகமாகியுள்ள இந்த சேவை, விரைவில் 1Gbps வேகம் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் இந்த 1Gbps வேக சேவை தற்போதைய அறிமுகத்தில் கிடைக்கப்பெறாது எனக் கூறப்படுகிறது. இது சேவை பற்றிய தகவல்கள், Jio.com தளம் மற்றும் MyJio செயலி ஆகியவற்றில் இந்த நாளின் பிற்பகுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சேவை குறித்த முழு விவரங்களுக்கு: Jio Fiber: ரூ.699 முதல் ரூ.8,499 வரை, அதிரடி சலுகைகள்!

ஜியோ பைபர் நிறுவல், சாதனத்தின் விலைகள்! (Jio Fiber installation, device prices)

நிறுவலுக்கு சந்தாதாரர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் குறித்த எந்த தகவலையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவிக்கவில்லை என்றாலும், இந்த திட்டத்தை சந்தாதாரர்களைப்  திரும்பப்பெறக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகையுடன் இலவசமாக வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ ரவுட்டர்கள் (router) அநேகமாக 1,000 ரூபாய் என்ற மலிவு விலையிலேயே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் வெவ்வேறு வகையான நுகர்வோருக்கு வெவ்வேறு அம்சங்களுடன் பலவிதமான ரவுட்டர்களை வழங்க வாய்ப்புள்ளது.

ஜியோ ஹோம் போன் லேண்ட்லைன் சேவை! (Jio Home Phone landline service)

அனைத்து ஜியோ ஃபைபர் சந்தாதாரர்களுக்கும் தனது இலவச லேண்ட்லைன் சேவையை வழங்கப்போவதாக ஜியோ தெரிவித்துள்ளது. இந்த சேவை ஜியோ ஹோம் போன் (அத்துடன் ஜியோ நிலையான குரல்) என்று அழைக்கப்படுகிறது. இந்த சேவை மூலம் மேலும் உள்நாட்டு தொலைபேசி பயனர்களுக்கு இலவச அழைப்புகள் மற்றும் மலிவு விலை சர்வதேச அழைப்புகளூம் வழங்கப்படவுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான அழைப்புகளுக்கான வரம்பற்ற சர்வதேச அழைப்புப் பெற மாதத்திற்கு 500 ரூபாய் சந்தா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை புதிய வாடிக்கையாளர்களுக்கு முதல் நாளிலிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ செட்-டாப் பாக்ஸ்! (Jio Set-Top Box​)

அவற்றில் முக்கியமான ஒன்று என்னவென்றால், இந்த ஜியோ பைபரை ஆண்டு சந்தாவில் பெறுபவர்களுக்கு HD LED அல்லது 4K டிவிக்களை இலவசமாக வழங்கவுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இந்த சேவையில் வாடிக்கையாளர்கள் ஜியோ பாரெவர் ப்ளான் (Jio Forever Plan) எனப்படும் ஆண்டு திட்டத்தை பெற்றால் HD LED அல்லது 4K டிவியுடன் 4K செட்-டாப் பாக்ஸையும் இலவசமாக வழங்கவுள்ளது ஜியோ நிறுவனம். 

Advertisement

ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் (Jio Postpaid Plus)

ஜியோ ஃபைபர் சந்தாதாரர்களுக்கு ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் வடிவத்தில் வயர்லெஸ் சேவையும் கிடைக்கப்பெறவுள்ள்து.  "பிளாட்டினம் தர சேவை" ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த சேவை, தரவு பகிர்வுடன் கூடிய குடும்பத் திட்டங்கள், சர்வதேச ரோமிங் மற்றும் தொலைபேசி மேம்படுத்தல்கள் ஆகியவற்றிற்கான முன்னுரிமை விகிதத்தில் வழங்கப்படும். ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் உயர்நிலை ஃபைபர் திட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் இருக்கும்.

'பர்ஸ்ட் டே- ஃபர்ஸ்ட் ஷோ' (First-Day-First-Show) சேவை!

ஜியோவின் பிரீமியம் வாடிக்கையாளர்கள், படங்கள் திரையரங்குகளில் வெளியான அதே நாளிலேயே, தங்கள் வீட்டில் அமர்ந்தபடி அந்த படங்களை பார்த்துக்கொள்ளலாம் என அம்பானி அறிவித்துள்ளார்.

ஜியோ பைபர் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? (How to apply for Jio Fiber)

ஜியோ ஜிகாபைபர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள், Jio.com தளம் மற்றும் MyJio செயலி ஆகியவற்றின் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இந்த திட்டம் குறித்த முழு தகவல்களும் இந்த இரண்டு தளங்களிலும் இன்று வெளியிடவுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஐபோன் 18 சீரிஸ் விலை உயர்வு முந்தைய கணிப்புகளை விடக் குறைவாக இருக்கும்!
  2. சாம்சங் கேலக்ஸி A27 5G அறிமுகம்: ஸ்னாப்டிராகன் சிப், 6.7-இன்ச் திரை மற்றும் சலுகைகள்!
  3. ஆப்பிள் விலை உயர்வு: மேக், ஐபேட் விலை அதிகரிப்பு, ஐபோன்களுக்கு விலக்கு
  4. Oppo Reno 16 முதல் பார்வைகள் (First Impressions)
  5. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 இந்தியாவில் அறிமுகம்: 52dB ANC மற்றும் 54 மணிநேர பேட்டரி லைஃப்
  6. லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் 5,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  7. வாட்ஸ்அப் நிறுவனம் தெரியாத எண்களிலிருந்து வரும் அரட்டைகள் (Chats) குறித்து பயனர்களை எச்சரிக்கத் தொடங்கியுள்ளது
  8. அமேசான் இந்தியாவின் விரைவு வர்த்தகம் 300 நகரங்களுக்கு விரிவாக்கம்; பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டம் அறிமுகம்!
  9. அசுஸ் ROG கேமிங், ப்ரோஆர்ட் லேப்டாப்கள் ரூ.1.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன!
  10. ஜூன் 29 இந்திய அறிமுகத்தை உறுதி செய்தது சாம்சங் கேலக்ஸி M47 5G; முக்கிய அம்சங்கள் கசிவு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.