இறுதியாக ஜியோ ஜிகா பைபர் (Jio GigaFiber Plan) திட்டம் இந்தியாவில் இன்று அறிமாகிறது. கடந்த மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனங்களின் ஆண்டு சந்திப்பில் அறிவித்தபடி, இந்தியாவில் 1600க்கு மேற்பட்ட நகரங்களில் இன்று அறிமுகமாகவுள்ளது. இந்த சேவை இன்னும் சில மணி நேரங்களில் அறிமுகமாகவுள்ள நிலையில், இந்த சேவை பற்றிய பல தகவல்கள் மர்மமாகவே உள்ளது. திட்ட சிறப்பம்சங்கள், சேவைகள் பற்றி எந்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில், இதுவரை ஜியோ ஜிகா பைபர் குறித்து வெளியான தகவல்கள் இதோ!
கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட முக்கியமான அறிவிப்பு எது என்றால், இந்த ஜியோ பைபர்தான். ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி ஜியோ பைபர் அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 5 தேதி அறிமுகமாகும் என குறிப்பிட்டார். இந்த சேவையின் சோதனையை கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கியது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இந்த திட்டம் குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் தற்போது 100Mbps வேகத்தில் அறிமுகமாகியுள்ள இந்த சேவை, விரைவில் 1Gbps வேகம் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மாதத்திற்கு 700 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை பல விதமான சேவை விலைகளில் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, இந்த ஜியோ ஜிகாபைபர் சேவைக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இந்தியாவில் தற்போது 100Mbps வேகத்தில் அறிமுகமாகியுள்ள இந்த சேவை, விரைவில் 1Gbps வேகம் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் இந்த 1Gbps வேக சேவை தற்போதைய அறிமுகத்தில் கிடைக்கப்பெறாது எனக் கூறப்படுகிறது. இது சேவை பற்றிய தகவல்கள், Jio.com தளம் மற்றும் MyJio செயலி ஆகியவற்றில் இந்த நாளின் பிற்பகுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சேவை குறித்த முழு விவரங்களுக்கு: Jio Fiber: ரூ.699 முதல் ரூ.8,499 வரை, அதிரடி சலுகைகள்!
நிறுவலுக்கு சந்தாதாரர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் குறித்த எந்த தகவலையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவிக்கவில்லை என்றாலும், இந்த திட்டத்தை சந்தாதாரர்களைப் திரும்பப்பெறக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகையுடன் இலவசமாக வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ ரவுட்டர்கள் (router) அநேகமாக 1,000 ரூபாய் என்ற மலிவு விலையிலேயே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் வெவ்வேறு வகையான நுகர்வோருக்கு வெவ்வேறு அம்சங்களுடன் பலவிதமான ரவுட்டர்களை வழங்க வாய்ப்புள்ளது.
அனைத்து ஜியோ ஃபைபர் சந்தாதாரர்களுக்கும் தனது இலவச லேண்ட்லைன் சேவையை வழங்கப்போவதாக ஜியோ தெரிவித்துள்ளது. இந்த சேவை ஜியோ ஹோம் போன் (அத்துடன் ஜியோ நிலையான குரல்) என்று அழைக்கப்படுகிறது. இந்த சேவை மூலம் மேலும் உள்நாட்டு தொலைபேசி பயனர்களுக்கு இலவச அழைப்புகள் மற்றும் மலிவு விலை சர்வதேச அழைப்புகளூம் வழங்கப்படவுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான அழைப்புகளுக்கான வரம்பற்ற சர்வதேச அழைப்புப் பெற மாதத்திற்கு 500 ரூபாய் சந்தா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை புதிய வாடிக்கையாளர்களுக்கு முதல் நாளிலிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றில் முக்கியமான ஒன்று என்னவென்றால், இந்த ஜியோ பைபரை ஆண்டு சந்தாவில் பெறுபவர்களுக்கு HD LED அல்லது 4K டிவிக்களை இலவசமாக வழங்கவுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இந்த சேவையில் வாடிக்கையாளர்கள் ஜியோ பாரெவர் ப்ளான் (Jio Forever Plan) எனப்படும் ஆண்டு திட்டத்தை பெற்றால் HD LED அல்லது 4K டிவியுடன் 4K செட்-டாப் பாக்ஸையும் இலவசமாக வழங்கவுள்ளது ஜியோ நிறுவனம்.
ஜியோ ஃபைபர் சந்தாதாரர்களுக்கு ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் வடிவத்தில் வயர்லெஸ் சேவையும் கிடைக்கப்பெறவுள்ள்து. "பிளாட்டினம் தர சேவை" ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த சேவை, தரவு பகிர்வுடன் கூடிய குடும்பத் திட்டங்கள், சர்வதேச ரோமிங் மற்றும் தொலைபேசி மேம்படுத்தல்கள் ஆகியவற்றிற்கான முன்னுரிமை விகிதத்தில் வழங்கப்படும். ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் உயர்நிலை ஃபைபர் திட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் இருக்கும்.
ஜியோவின் பிரீமியம் வாடிக்கையாளர்கள், படங்கள் திரையரங்குகளில் வெளியான அதே நாளிலேயே, தங்கள் வீட்டில் அமர்ந்தபடி அந்த படங்களை பார்த்துக்கொள்ளலாம் என அம்பானி அறிவித்துள்ளார்.
ஜியோ ஜிகாபைபர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள், Jio.com தளம் மற்றும் MyJio செயலி ஆகியவற்றின் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இந்த திட்டம் குறித்த முழு தகவல்களும் இந்த இரண்டு தளங்களிலும் இன்று வெளியிடவுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்