பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான ஆஃபரை அளித்துள்ளது. ஒரு முறை ரீசார்ஜ் செய்துவிட்டால் அடுத்த 600 நாட்களுக்கு எந்த தொல்லையும் இல்லாமல் இருக்கலாம்.
இதற்கு ரூ. 2,399 க்கு ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இதில் பேசுவதற்கு எந்த கட்டணமும் கிடையாது. ஆனால் டேட்டா சேவைகள் வழங்கப்படாது என்பது குறைபாடாக இருக்கிறது.
இதேபோன்று 149 மற்றும் 725 ரூபாய் ரீசார்ஜ் ப்ளான்களை பி.எஸ்.என்.எல் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த பிளானில் இருப்பவர்கள் வேறு பிளானுக்கு மாறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அந்தமான் நிகோபர், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சில இடங்களை தவிர்த்து இந்தியாவின் மற்ற அனைத்து இடங்களிலும் ரூ 2,399 ப்ளான் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேட்டா உபயோகம் செய்யாமல், வாய்ஸ் கால் மட்டும் செய்து கொண்டிருப்பவர்கள் இந்த 2,399 ப்ளானை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்