ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் திருத்தப்பட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் இப்போது நாட்டில் நேரலையில் உள்ளன. தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் இருவரும் வெவ்வேறு நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக விலைப் பிரிவுகளில் பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் வவுச்சர்களை வழங்குகிறார்கள். ஏர்டெல்லின் புதிய அன்லிமிடெட் திட்டங்கள் ரூ. 149 மற்றும் ரூ. 2,398 ஆகவும், அதே சமயம் வோடபோன் ஐடியாவின் கட்டண சலுகைகள் ரூ. 149 மற்றும் ரூ. 2,399-க்கும் வழங்குகின்றன.
Airtel ரூ. 148 ப்ளான் vs Vodafone Idea ரூ. 149 ப்ளான்
ஏர்டெல்லின் புதிய ரூ. 148 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் அன்லிமிடெட் அழைப்பு, ஒரு மாதத்திற்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 300 தினசரி எஸ்எம்எஸ் செய்திகள் போன்ற பலன்களை வழங்குகிறது. மறுபுறம், வோடபோன் ஐடியா ரூ. 149 திட்டத்தில் 28 நாள் செல்லுபடியாகும். பலன்களில், அன்லிமிடெட் குரல் அழைப்புகள் (ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு 1,000 நிமிடங்கள் FUP), முழு மாதத்திற்கும் 2 ஜிபி டேட்டா மற்றும் ஒவ்வொரு நாளும் 300 எஸ்எம்எஸ் செய்திகள் ஆகியவை அடங்கும்.
Airtel ரூ. 248 ப்ளான் vs Vodafone Idea ரூ. 249 ப்ளான்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏர்டெல் ரூ. 248 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். மேலும், அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகளின் ஒதுக்கீட்டை வழங்குகிறது. ஒப்பிடுகையில், வோடபோன் ஐடியாவின் ரூ. 249 திட்டம் 28 நாள் செல்லுபடியாகும் மற்றும் அன்லிமிடெட் குரல் அழைப்புகள் (ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு 1,000 நிமிடங்கள் FUP), ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் செய்திகளின் தினசரி கொடுப்பனவு போன்ற பலன்களை வழங்குகிறது.
Airtel ரூ. 298 ப்ளான் vs Vodafone Idea ரூ. 299 ப்ளான்
ஏர்டெல்-ன் திருத்தப்பட்ட ரூ. 298 திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஆனால், தினசரி டேட்டா பலனை 2 ஜிபிக்கு அதிகரிக்கிறது, மீதமுள்ள பலன்கள் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ஏர்டெலின் ரூ. 298 திட்டத்திற்கு வோடபோனின் ரூ. 299 கட்டணத் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். அன்லிமிடெட் குரல் அழைப்புகள் (ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு 1,000 நிமிடங்கள் FUP), ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகள் ஆகியவற்றை வழங்குகின்றன.
Airtel ரூ. 598 ப்ளான் vs Vodafone Idea ரூ. 599 ப்ளான்
ஏர்டெலின் ரூ. 598 திட்டம், செல்லுபடியை 84 நாட்களுக்கு உயர்த்தும், மீதமுள்ள தொகுக்கப்பட்ட பலன்களில் அன்லிமிடெட் அழைப்பு, 1.5 ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகள் ஆகியவை அடங்கும். மறுபுறம், வோடபோன் ஐடியாவின் ரூ. 599 கட்டணத் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் அன்லிமிடெட் குரல் அழைப்புகள் (ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு 3,000 நிமிடங்கள் FUP), ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் செய்திகளின் கொடுப்பனவு ஆகியவற்றை உள்ளடக்கிய பலன்களை வழங்குகிறது.
Airtel ரூ. 698 ப்ளான் vs Vodafone ரூ. 699 ப்ளான்
ஏர்டெல்-ன் புதிய ரூ. 698 திட்டத்தில் 84 நாட்கள் செல்லுபடியாகும். அன்லிமிடெட் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா ஆகிய பலன்களை வழங்குகின்றன. வோடபோன் ஐடியாவின் ரூ. 699 திட்டம் அன்லிமிடெட் குரல் அழைப்புகள் (ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு 3,000 நிமிடங்கள் FUP), ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகளை வழங்குகிறது.
Airtel ரூ. 1,498 ப்ளான் vs Vodafone Idea ரூ. 1,499 ப்ளான்
ஏர்டெல்லின் நீண்டகால ரூ. 1,498 திட்டம் 365 நாட்கள் மற்றும் அன்லிமிடெட் அழைப்பு, 3,600 எஸ்எம்எஸ் செய்திகளின் மொத்த கொடுப்பனவு மற்றும் 24 ஜிபி டேட்ட உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது. ஒப்பிடுகையில், வோடபோன் ஐடியா ரூ. 1,499 வருடாந்திர செல்லுபடியாகும் திட்டம் அன்லிமிடெட் குரல் அழைப்புகள் (ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு 12,000 நிமிடங்கள் FUP), 24 ஜிபி டேட்டா மற்றும் 3,600 எஸ்எம்எஸ் செய்திகள் ஆகியவற்றை வழங்குகிறது.
Airtel ரூ. 2,398 ப்ளான் vs Vodafone Idea ரூ. 2,399 ப்ளான்
ஏர்டெல் ரூ. 2,398 திட்டத்தில் ஒரு ஆண்டு கால செல்லுபடியாகும் மற்றும் அன்லிமிடெட் அழைப்பு, ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் 1.5 ஜிபி தினசரி டேட்டா ஆகியவை அடங்கும். மறுபுறம், வோடபோன் ஐடியா ரூ. 2,399 கட்டணத் திட்டமும் 365 நாட்கள் செல்லுபடியாகும். மேலும், அன்லிமிடெட் குரல் அழைப்புகள் (ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு 12,000 நிமிடங்கள் FUP), ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் செய்திகள் ஆகியவற்றை அனுமதிக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ. 379 கட்டண திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் அன்லிமிடெட் அழைப்பை அனுமதிக்கிறது (ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு 3,000 நிமிடங்கள் FUP), தினசரி 1,000 எஸ்எம்எஸ் ஒதுக்கீடு மற்றும் முழு மாதத்திற்கும் 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வோடபோனில் இருந்து வோடபோன் மற்றும் வோடபோனில் இருந்து ஐடியா வரையிலான குரல் அழைப்புகள் (உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் தேசிய ரோமிங்கில்) மற்றும் நேர்மாறாக ஆன்-நெட் என்று கருதப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இலவச பயன்பாட்டு ஒதுக்கீட்டிற்குப் பிறகு ஆஃப்-நெட் அழைப்புகள் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். கடைசியாக, வோடபோன் ஐடியா முதல் நான்கு ரீசார்ஜ் திட்டங்களை ரூ. 97, ரூ. 197, ரூ. 297, மற்றும் ரூ. 647-யாக விலையிடப்பட்டுள்ளது.
Airtel | Validity | Data | SMS | Unlimited Calling | Vodafone Idea | Validity | Data | SMS | Unlimited Calling |
---|---|---|---|---|---|---|---|---|---|
Rs. 148 | 28 days | 2GB | 300/day | Yes | Rs. 149 | 28 days | 2GB | 300 | Yes (FUP of 1000 mins) |
Rs. 248 | 28 days | 1.5GB/day | 100/day | Yes | Rs. 249 | 28 days | 1.5GB/day | 100/day | Yes (FUP of 1000 mins) |
Rs. 298 | 28 days | 2GB/day | 100/day | Yes | Rs. 299 | 28 days | 2GB/day | 100/day | Yes (FUP of 1000 mins) |
Rs. 598 | 84 days | 1.5GB/day | 100/day | Yes | Rs. 599 | 84 days | 1.5GB/day | 100/day | Yes (FUP of 1000 mins) |
Rs. 698 | 84 days | 2GB/day | 100/day | Yes | Rs. 699 | 84 days | 2GB/day | 100/day | Yes (FUP of 1000 mins) |
Rs. 1,498 | 365 days | 24GB | 3,600 | Yes | Rs. 1,499 | 365 days | 24GB | 3,600 | Yes (FUP of 1000 mins) |
Rs. 2,398 | 365 days | 1.5GB/day | 100/day | Yes | Rs. 2,399 | 365 days | 1.5GB/day | 100/day | Yes (FUP of 1000 mins) |
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்