ஏர்டெல் நிறுவனம், நாளுக்கு நாள் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. புதிய திட்டங்கள், முன்பு இருந்ததை விட கூடுதல் டேட்டா பொன்ற திட்டங்கள். அதன்படி இன்று ஒரு கூடுதல் டேட்டா வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். இந்த அறிவிப்பின்படி, 365 வேலிடிட்டி கொண்ட 1,699 ரூபாய் ஏர்டெல் பிரீபெய்ட் திட்டம்தான், அந்த கூடுதல் டேட்டாவை பெறவுள்ள திட்டம். ஏர்டெல் நிறுவனம், இந்த திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்பவர்களுக்கு நாளொன்றிற்கு 1.4GB டேட்டாவை வழங்கவுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஏர்டெல் தளத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, 1,699 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் நாளொன்றிற்கு 1.4GB டேட்டா, 100 மேசேஜ்களுடன் அளவற்ற தொலைபேசி அழைப்புகளையும் இலவசமாக வழங்கவுள்ளது ஏர்டெல் நிறுவனம். மேலும் இந்த திட்டத்தில் ஜீ5, ஹூக் மற்றும் 350 நேரலை தொலைக்காட்சி சேனல்களுக்கான ஏர்டெல் டிவி ப்ரீமியத்தின் அனுமதியையும் இலவசமாக வழங்கவுள்ளது ஏர்டெல் நிறுவனம். மேலும், இந்த திட்டத்தின் மூலம், வின்க் மியூசிக்கிற்கும் இலவச அனுமதி கிடைக்கும்.
முன்னதாக இந்த ஆண்டின் ஜனவரி மாதம் இந்த 1,699 ரூபாய் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது நாளொன்றிற்கு 1GB டேட்டா, 100 மேசேஜ்களுடன் அளவற்ற தொலைபேசி அழைப்புகள் என்ற வசதிகளுடன் இந்த திட்டம் அறிமுகமானது. அறிமுகமாகி இன்று வரை எந்த ஒரு மாற்றத்தையும் பெறாத இந்த திட்டத்திற்கு தற்போது 400MB டேட்டாவை கூட்டி அளித்துள்ளது, ஏர்டெல் நிறுவனம்.
வோடாபோன் நிறுவனமும் 1,699 ரூபாயில் 365 வெலிடிட்டியுடன் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. அந்த திட்டம் நாளொன்றிற்கு 1GB டேட்டா, 100 மேசேஜ்களுடன் அளவற்ற தொலைபேசி அழைப்புகள் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
முன்னதாக, ஏர்டெல் நிறுவனம், 399, 448, மற்றும் 499 ரூபாய் ஆகிய திட்டங்களுக்கு 400MB டேட்டாவை கூட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்