புதிய திட்டங்களை அறிவித்துள்ள ஏர்டெல்! ரீ-சார்ஜ் செய்தால் 4 லட்சம் லைப் இன்சூரன்ஸ்!

புதிய திட்டங்களை அறிவித்துள்ள ஏர்டெல்! ரீ-சார்ஜ் செய்தால் 4 லட்சம் லைப் இன்சூரன்ஸ்!

ஏர்டேல் நிறுவனம் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது

ஹைலைட்ஸ்
  • 129 ரூபாய் மற்றும் 249 ரூபாய்க்கு இரண்டு புதிய திட்டங்கள்
  • 249 ரூபாய்க்கு 4 லட்சம் ரூபாய்க்கு லைப் இன்சூரன்ஸ் பாலிசி
  • 129 ரூபாய்க்கு 2GB டேட்டா, அளவற்ற தொலைபேசி அழைப்புகள்
விளம்பரம்


நேற்று பி எஸ் என் எல் நிறுவனம், தொலைத்தொடர்புத்துறையில் தன் நிலையை தக்கவைத்துக்கொள்ள, 47 ரூபாய்க்கு மற்றும் 198 ரூபாய்க்கு இரண்டு புதிய திட்டங்களை அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று ஏர்டெல் நிறுவனம், இந்த போட்டியில் தன்னை முன்னிறுத்திக்கொள்ள இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் 129 ரூபாய்க்கு 1GB-யாக இருந்த டேட்டாவை 2GB-யாக உயர்த்தி வழங்கியுள்ளது, மற்றும் 249 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 4 லட்சம் ரூபாய்க்கு லைப் இன்சூரன்ஸ் பாலிசி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

ஏர்டெல் 129 ரூபாய் திட்ட விவரங்கள்:

இந்த திட்டத்தில் நீங்கள் 129 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், உங்களுக்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டாவும், 100 சாதாரன மெசேஜ்களும், மற்றும் அளவற்ற தொலைபேசி அழைப்புகளையும் வழங்கவுள்ளது, ஏர்டெல் நிறுவனம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள். இதுமட்டுமின்றி ஏர்டெல் டிவி மற்றும் வின்க் மியூசிக் ஆகிய இரண்டிற்கும், ஒரு மாத சந்தாவை இலவசமாக வழங்கவுள்ளது.

முன்னதாக இந்த திட்டத்தில், குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 1GB டேட்டா, 100 சாதாரன மெசேஜ்கள், மற்றும் அளவற்ற தொலைபேசி அழைப்புகளை வழங்கியது. மற்ற வாடிக்கையாளர்கள், இந்த ப்ளானில் ரீ-சார்ஜ் செய்தால், அவர்களுக்கு ஒரு மாத அளவற்ற தொலைபேசி அழைப்புகள் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் தளம் மற்றும் ஏர்டெல் செயலியில், அந்த பழைய திட்டம், நீக்கப்பட்டு இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏர்டெல் 249 ரூபாய் திட்ட விவரங்கள்:

இந்த திட்டத்தில் டேட்டா, மெசேஜ் மற்றும் தொலைபேசி அழைப்புகளில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவராத ஏர்டெல் நிறுவனம், இந்த திட்டட்தில் ரீ-சார்ஜ் செய்பவர்களுக்கு 4 லட்சம் மதிப்புள்ள லைப் இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த பாலிசியை எச் டி எப் சி லைப் மற்றும் பாரதி ஆக்சா மூலம் வழங்கவுள்ளது ஏர்டெல் நிறுவனம். மேலும் இந்த திட்டத்தின் மூலம், ஏர்டெல் டிவி சந்தா, வின்க் மியூசிக் சந்தா, நீங்கள் புது 4G போனை வாங்கினால் 2000 ரூபாய் வரை தள்ளுபடி மற்றும் 1 வருட நார்டன் செக்கியூரிடி என பல சலுகைகளை வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தில் நீங்கள் 249 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், உங்களுக்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டாவும், 100 சாதாரன மெசேஜ்களும், மற்றும் அளவற்ற தொலைபேசி அழைப்புகளையும் 28 நாட்களுக்கு வழங்கவுள்ளது. ஏர்டெல் தளம் மற்றும் ஏர்டெல் செயலியின் வாயிலாக இந்த திட்டத்தை ரீ-சார்ஜ் செய்துகொள்ளலாம்.

இந்த லைப் இன்சூரன்ஸ் பாலிசியை வாடிக்கையாளர்கள் பெற சில முக்கிய விதிகளையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர் 18 முதல் 54 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தை இடைவிடாமல், தொடர்ந்து ரீ-சார்ஜ் செய்ய வேண்டும். இந்த இன்சூரன்ஸ்-ஐ தங்கள் மொபைல்போனில் எஸ் எம் எஸ் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் தேவையான சான்றுகளை, பதிவேற்ற வேண்டும். மேலும், இந்த இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் ஏர்டெலில்- அதிகாரப்பூர்வமான கடைகளில் கைப்படவும் பதிவு செய்து கொள்ளலாம். இது போன்ற தகவல்களை கூறியுள்ளது, ஏர்டெல் நிறுவனம்.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Airtel
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »