ஏர்டெல் பேமெண்ட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு, கார்டு பயன்படுத்தாமல் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் வசதியை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த சேவையைப் பயன்படுத்த, ஐஎம்டி வசதி கொண்டுள்ள ஏ.டி.எம்மிற்கு சென்று, மை ஏர்டெல் ஆப் மூலம் 'கேஷ் வித்ட்ராயல்' ஆப்ஷனை க்ளிக் செய்யவும். பிறகு, மை ஏர்டெல் ஆப் மூலம், மொபைல் எண்ணை பதிவிட்டு > செண்டர் கோட் பதிவிடவும் > ஓடிபி பதிவிடவும் > செல்ஃப் வித்ட்ராயல் ஆப்ஷன் க்ளிக் செய்யவும் > ஐஎம்டி அமவுண்ட் பதிவிட்டு > பணத்தை எடுக்கவும்
யூஎஸ்எஸ்டி சேவை மூலம் பணம் எடுக்க, பதிவு செய்யப்பட்டுள்ள ஏர்டெல் எண்ணில் இருந்து 4002# என்ற எண்ணிற்கு அழைக்கவும். பின்னர், கேஷ்லெஸ் கேஷ் வித்ட்ராயல் செலக்ட் செய்யவும் > செல்ஃப் வித்ட்ராயல் ஆப்ஷன் க்ளிக் செய்யவும் > ஐஎம்டி அமவுண்ட் பதிவிட்டு > பணத்தை எடுக்கவும்
முதல் இரண்டு பண பரிவர்தனைகள் இலவசமாக அளிக்கபப்டும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, 25 ரூபாய் பரிவர்தனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது 20,000 ஏ.டி.எம்களில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 1,00,000 ஏ.டி.எம்களில் இந்த வசதி கொண்டு வரப்படும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது
டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்க இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படுள்ளதாக ஏர்டெல் தலைமை இயக்குனர் அனுபிரதா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்