ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு 3 மாத Netflix சந்தா இலவசம்

ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு 3 மாத Netflix சந்தா இலவசம்
விளம்பரம்

ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் இனி நெட்ஃப்ளிக்ஸ் தொடர்கள், திரைப்படங்களை ஏர்டெல் டிவி, மை ஏர்டெல் ஆப்களில் வழியாகக் காணலாம். நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது போஸ்ட்பெய்டு, V-Fiber Home Broadband திட்ட சந்தாதாரர்களுக்கு இவ்வசதியை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் இவர்கள் ஏர்டெல் செயலிகள் மூலமாகவே நெட்ஃப்ளிக்ஸ் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் என்பதோடு அதற்குரிய கட்டணத்தையும் ஏர்டெல் பில்லில் சேர்த்தே கட்டலாம். மேலும், குறிப்பிட்ட சில பிளான்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாத நெட்ஃப்ளிக்ஸ் இலவசமாக வழங்கப்படும். இவர்கள் ஏர்டெல் டிவி ஆப், மை ஏர்டெல் ஆப் மூலம் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த மூன்று மாத இலவச சேவை குறிப்பிட்ட போஸ்ட்பெய்டு, பிராட்பேண்ட் பிளான்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதுபற்றிய விவரங்கள் கூடிய விரைவில் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும். ஒருவேளை இந்த பிளான்களில் இல்லையென்றாலும் அவற்றுக்கு அப்கிரேடு செய்துகொண்டு இந்த மூன்று மாத இலவச நெட்ஃப்ளிக்ஸ் சேவையைப் பெறலாம். இந்த பிளான்களுக்கு அப்கிரேடு செய்யாமல் சாதாரணமாகவும் Airtel TV, My Airtel ஆப்கள் மூலமாக நெட்ஃப்ளிக்ஸ் தொடர்களைக் கண்டுகளிக்கலாம். கட்டணத்தை போஸ்ட்பெய்டு பில்லுடன் சேர்த்து கட்டிவிட வேண்டும். மூன்று மாத இலவச சந்தா பெற்றவர்களும் அக்காலம் முடிந்ததும் பிறரைப் போல தங்கள் ஏர்டெல் போஸ்ட்பெய்டு, பிராட்பேண்ட் பில்லுடன் நெட்ஃப்ளிக்சுக்கான கட்டணத்தைச் செலுத்தி தொடர்ந்து நிகழ்சிக்களைக் காணலாம்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Airtel, Netflix
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »