ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீ நெட்ஃபிளிக்ஸ் ஆஃபர்!

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீ நெட்ஃபிளிக்ஸ் ஆஃபர்!
விளம்பரம்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு மற்றும் பிராட்பாண்ட் பிளான்களுடன் நெட்ஃபிளிக்ஸ்-க்கான இலவச இணைப்பையும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என அறிவித்திருந்தது. இருப்பினும் இந்த பிளான்களுக்கான விலை விபரங்களை அறிவிக்காமல் இருத்தது.

இந்தநிலையில், சரியாக ஒரு மாதம் கழித்து தற்போது, விலை விபரங்களை அறிவித்த ஏர்டெல் நிறுவனம், மை ஏர்டெல் ஆப் மூலம் நெட்ஃபிளிக்ஸ்-க்கான இலவச இணைப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும், இது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் உள்ளது. பிராட்பாண்ட் வாடிக்கையாளர்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.

இந்த ஆஃபர் ரூ.499, ரூ.649, ரூ.799, ரூ.1,199, ரூ.1,599, ரூ.1,999 மற்றும் ரூ.2,999 உள்ளிட்ட போஸ்ட்பெய்டு பிளான்களை பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆஃபரில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள், நெட்ஃபிக்ஸில் ரூ.500க்கான பிளான்களை 3 மாதம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இந்த இலவச இணைப்பு மூலம் ஒருவர் ஒரு மொபைலில் மட்டுமே நெட்ஃபிளிக்ஸை பயன்படுத்த முடியும். மேலும் வீடியோவை ஸ்டாண்டர்ட் தரத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

இந்த இலவச நெட்ஃபிளிக்ஸ் ஆஃபரை பெற,

  1. மை ஏர்டெல் ஆப்-பில் ஏர்டெல் தேங்கஸ் பேனரை அழுத்த வேண்டும்.
  2. அதில், நெட்ஃபிளிக்ஸ் கிப்ட் ரூ.1,500 என்று உள்ளதில் சென்று கிளைம் பட்டனை அழுத்த வேண்டும்.
  3. பின்னர் அதில், லாகின் ஐடி இருந்தால், லாகின் செய்யலாம் அல்லது நெட்ஃப்ளிக்ஸில் புதிதாக அக்கவுண்ட் ஓப்பன் செய்ய வேண்டும்.
  4. இதன் பின்னர், ரூ.1,500-க்கான 3 மாத பிளான் உங்கள் நெட்ஃபிளிக்ஸில் அக்கவுண்ட்டில் ஏறிவிடும்.

Airtel Netflix Free 3 Month 033018 143036 7301 Airtel Netflix Free 3 Month Offer

 

இந்த வழிமுறைகளை பின்பற்றி 3 மாத இலவச நெட்ஃபிளிக்ஸ் இணைப்பை பெறலாம். இதற்காக எந்த ஒரு தனி கட்டணமும் செலுத்த தேவையில்லை.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Airtel, Netflix
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »