நாடு முழுவதும் ஐபிஎல் மோகம் சூழ்ந்திருக்கம் நிலையில் ஏர்டெல் மற்றும் டாடா ஸ்கை தொலைக்காட்சி டீலர்கள் தற்போது ஐபிஎல்-திருவிழாவை கொண்டாட இலவச ஸ்போர்ட்ஸ் சேனலை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.
ஏர்டெல் சார்பில் இலவசமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் வழங்குகின்றனர். டாடா ஸ்கை நிறுவனம் சார்பில் ரூ.646க்கு ஃவேமலி ஸ்பார்ட்ஸ் ஹெச்டி பேக் மூலம் பல ஸ்போர்ட்ஸ் சேனல்கள் மற்றும் இதர பொழுதுபோக்கு சேனல்களையும் வழங்குகின்றனர்.
இவர்கள் மட்டுமின்றி டி2ஹெச் சேனல் சார்பில் புதிய மொழிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
டாடா ஸ்கை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 பங்களாதேஷ் சேனல்கள் வரும் மே மாதம் 19ஆம் தேதி வரைக்கும் இலவசமாக தரப்படுகறிது.
மேலும் டாடா ஸ்கை தனித்து இருக்கும் ஃபேமலி ஸ்போர்ட்ஸ் ஹெச்டி பேக் மூலம் ரூ.646க்கு 96 சேனல்கள் (சோனி மற்றும் ஸ்டார்) உள்ளடங்கும். இதே பேக்கின் எஸ்டி வகை ரூ.456-க்கு வழங்கப்படுவது கூடுதல் தகவல். புதிய ஏர்டெல் டிஜிட்டல் டிவி வாடிக்கையாளர்களுக்கு இலவச ஃப்ரிவியூ கிடைக்கவுள்ளது.
அதுமட்டுமின்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 பங்களா சேனல்களை கூடுதல் கட்டனமின்றி வழங்குகிறது.
டி2ஹெச் சார்பில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 (ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், கன்னடம் மற்றும் பங்களா) போன்ற மொழிகளில் வழங்குகிறது. ஆனால் எந்த சேன்களுக்கும் இலவச சலுகை எதும் பெறவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்