Airtel Digital TV HD மற்றும் SD Set-Top Box-ற்கு அதிரடி விலை குறைப்பு!

Airtel Digital TV HD மற்றும் SD Set-Top Box-ற்கு அதிரடி விலை குறைப்பு!

எச்டி செட்- டாப் பாக்ஸ் சமீபத்தில் ரூ. 1,800-க்கு கிடைத்தது

ஹைலைட்ஸ்
  • Airtel Digital TV HD set-top box தற்போது ரூ.1,300-க்கு கிடைக்கிறது
  • இதற்கு முன் 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது
  • ஆப்ரேட்டரும் தனது SD set-top box-ஐ ரூ.1,100-க்கு விற்பனை செய்கிறார்
விளம்பரம்

HD Set-Top Box-ஐ Airtel Digital TV வாடிக்கையாளர்களுக்கு இப்போது ரூ. 1,300-க்கு விலை குறைப்பில் கிடைக்கிறது. டி.டி.எச் ஆபரேட்டர் தனது எஸ்டி செட்-டாப் பாக்ஸையும் ரூ. 1,100-க்கு வழங்குகின்றனர். புதுடெல்லியை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கைத் தொடர்ந்து ஏர்டெல் டிஜிட்டல் டிவி போட்டியாளரான டாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ்களின் விலைகளைக் குறைத்தது. சமீபத்திய காலங்களில், ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டிஷ் டிவி உள்ளிட்ட டிடிஎச் ஆபரேட்டர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு இயங்கும் செட்-டாப் பாக்ஸ்கலை ஸ்மார்ட் டிவி போன்ற அனுபவத்தை மக்களுக்கு வழங்குவதற்காக அறிமுகப்படுத்தியுள்ளனர்.

விலை குறைப்பு:

ஏர்டெல் டிஜிட்டல் டிவி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், புதிய வாடிக்கையாளர்கள் ஏர்டெல் எச்டி செட்-டாப் பாக்ஸை ரூ. 1,300-க்கு வழங்குகிறது. எச்டி செட்- டாப் பாக்ஸ் சமீபத்தில் ரூ. 1,800-க்கு கிடைத்தது - ரூ. 500 விலை குறைப்பை பரிந்துரைத்தது.

ஏர்டெல் டிஜிட்டல் டிவி வலைத்தளம், ஏர்டெல் எஸ்டி செட்-டாப் பாக்ஸின் விலையில் ஏற்பட்ட மாற்றத்தையும் எடுத்துக்காட்டுகிறது, இது இப்போது ரூ. 1,100க்கு கிடைக்கிறது.

airtel digital tv hd sd set top box prices gadgets 360 Airtel Digital TV  Airtel

ஏர்டெல் டிஜிட்டல் டிவி தனது எச்டி மற்றும் எஸ்டி செட்-டாப் பாக்ஸ்களைக் குறைந்த விலையில் வழங்குகிறது.

ஏர்டெல் டிஜிட்டல் டிவி எச்டி செட்-டாப் பாக்ஸ்களின் பட்டியலிடப்பட்ட விலைகளில் குறிப்பாக எந்த டி.டி.எச் பேக்கையும் சேர்க்கவில்லை. இதன் பொருள் வாடிக்கையாளர்கள் செட்-டாப் பாக்ஸை வாங்கிய பிறகு தனித்தனியாக டி.டி.எச் பேக்கை வாங்க வேண்டும். தொலைதொடர்பு பேச்சு (Telecom Talk) குறிப்பிட்டுள்ளபடி, குறைக்கப்பட்ட விலையில் ஏதேனும் நிறுவல் கட்டணங்கள் (installation charges) உள்ளதா என்பதும் தெளிவாக இல்லை.

ஜூலை மாதத்தில், டாடா ஸ்கை அதன் எச்டி மற்றும் எஸ்டி செட்-டாப் பாக்ஸ்களின் விலையை குறைத்தது. ஆபரேட்டர் அதன் எச்டி செட்-டாப் பாக்ஸை ரூ. 1,499 மற்றும் எஸ்டி செட்-டாப் பாக்ஸ் ரூ. 1,399க்கு வாங்கலாம் என்று அறிவித்தனர்.

தங்களது எஸ்டி மற்றும் எச்டி செட்-டாப் பாக்ஸ்களின் விலையை குறைப்பதோடு, டிடிஎச் ஆபரேட்டர்கள் இப்போதெல்லாம் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான செட்-டாப் பாக்ஸ் விருப்பங்களை வாடிக்கையாளர்களுக்கு Amazon Prime Video, ALTBalaji, Voot போன்ற பல்வேறு over-the-top (OTT) செயலிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். 

கடந்த மாதம், ஏர்டெல் தொலைக்காட்சி பார்க்கும் அனுபவத்தை மாற்றுவதற்காக  Android 9 Pieஅடிப்படையிலான எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸை கொண்டு வந்தது. டிஷ் டிவியும் இந்த வார தொடக்கத்தில் அதன் ஆண்ட்ராய்டு இயங்கும் டிஷ் எஸ்எம்ஆர்டி ஹப்பை (Dish SMRT Hub) டால்பி அட்மோஸ் ஆதரவு மற்றும் கூகிள் பிளே ஸ்டோர் அணுகல் போன்ற அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியது.

முக்கிய டி.டி.எச் ஆபரேட்டர்களின் சமீபத்திய மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு கேமிங் ஆதரவு ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸைக் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோவின் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைக்காக உருவாக்கப்பட்ட மிகைப்படுத்தலின் காரணமாகும். ஆகஸ்ட் மாதம் நடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (Annual General Meeting (AGM) Gameloft, Tencent மற்றும் Microsoft போன்ற நிறுவனங்களுடன் மும்பையைச் சேர்ந்த நிறுவனம் தனது பார்ட்னர்ஷிப்பை அறிவித்தது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »