இந்த ஆண்டு வாக்காளர்களின் எண்ணிக்கைகளை அதிகரிக்கும் நோக்கத்தில் தேர்தல் ஆணையம் ஓரு புதிய முயற்சியை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.அதன்படி ஓவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படம் வாக்காளர் தினம் (ஜனவரி 25) அன்று ஃபேஸ்புக் நிறுவனம் 18 வயதுக்கு மேல்லுள்ள தனது பயனாளிகளுக்கு வாக்காளர்களுக்கான வாக்குறுதி ஓன்றை நினைவுட்டவுள்ளது.
‘இவ்வருடம் நாம் 8 வது தேசிய வாக்காளர் தினத்தை கொண்டும் முயற்சியில், தேர்தல் ஆணையம் ஃபேஸ்புக்குடன் இணைந்து மிகப்பெரிய வாக்காளர்கள் உறுதி எடுத்துக்கொள்ளும் நிகழ்வை நடத்தவுள்ளது. இதன் மூலம் வாக்களிப்பதின் முக்கியதுவத்தை மக்களிடையே கொண்டு சேர்க முடியும் என நம்புகிறோம்' என தலைமை தேர்தல் அதிகாரி ஓம் பிரகாஷ் ராவாட் கூறினார்."
‘டேக் தி பிளட்ஜ்' என்னும் பட்டனை நாம் தேர்வு செய்யும்போது ஃபேஸ்புக் தானக தேர்தல் ஆணையத்தின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு கொண்டு செல்கிறது.
‘இப்போதைய இளைஞர்கள் இந்த சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்திகின்றனர். மற்றவற்களுடன் பேச மற்றும் பின்தொடர இந்த தளம் பயன்படுகின்ற நிலையில், தேர்தல் ஆணையத்தால் ஃபேஸ்புக் மூலம் இளைய தலைமுறையை ஈர்க முடியும்ன. அதன் மூலம் தேர்தல்களின் நடைமுறைகளை குறித்து விளிப்புணர்வு ஏற்படும்' என ஃபேஸ்புக்கின் இந்தியா, தென் மற்றும் மத்திய ஆசிய அதிகாரி நிதின் சலாவுஜா கூறினார்.
மேலும் கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு தேர்தல்களில் தேர்தல் ஆணையத்துடன் ஃபேஸ்புக் நிறுவனம் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தனது 18 வயது நிறம்பிய பயனாளர்களுக்கு பிறந்த நாள் வாழ்துக்கள்போல் 'தேர்தலில் வாக்களிப்பதின் முக்கியம் என்ன' போன்ற செய்திகளை அனுப்பு திட்டம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்