டைட்டனிற்கு ட்ரான் ஒன்றை அனுப்பவுள்ள நாசா, உயிர்கள் உள்ளதா என்பதற்கான ஒரு தேடல்!

விளம்பரம்
Written by Agence France-Presse மேம்படுத்தப்பட்டது: 28 ஜூன் 2019 15:17 IST

Photo Credit: YouTube/ NASA Video

சூரிய குடும்பத்தில் அடுத்த பணியாக, நாசா டைட்டனிற்கு ட்ரான் ஒன்றை அனுப்பவுள்ளது. டைட்டன் என்பது, சனி கோளின் மிகப்பெரிய நிலா என்பது குறிப்பிடத்தக்கது. நாசா இது குறித்து கூறுகையில், அங்கு உயிர்கள் வாழ்வதற்கு ஏதாவது அறிகுறி இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளவே இந்த ட்ரானை அனுப்பவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு 'டிராகன்ஃபிளை' என பெயரிட்டுள்ள நாசா நிறுவனம், இதை 2026-ஆம் ஆண்டில் இந்த பணியை செயல்படுத்தவுள்ளது. 2026-ல் விண்ணில் ஏவப்படவுள்ள இந்த ட்ரான் 2034-ஆம் ஆண்டு, டைட்டனை சென்றடையும் என நாசா குறிப்பிட்டுள்ளது. 

பூமியை தவிர்த்து, தன் தரைப்பகுதியில் தண்ணீர் ஆறுகள், குளங்கள் மற்றும் கடல் ஆகியவற்றை கொண்டுள்ளது என கருத்தப்படும் ஒரே கோள் இதுதான். மேலும், இந்த கோளில் மீதேன், ஈதேன் போன்ற ஹைட்ரோ கார்பன்களும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாசாவின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் இது குறித்து கூறுகையில்,"இந்த மர்மமான உலகை பார்வையிடுவது என்பது, இந்த பிரபஞ்சத்தில் உயிர்களின் இருப்பு பற்றி நாம் அறிந்திருப்பதை மாற்றி அமைக்கும்" என கூறியுள்ளார்.

"2.7 ஆண்டுகள் கால அளவு கொண்ட இந்த பணியில், டிராகன்ஃபிளை வேறுபட்டுள்ள சுற்றுச்சூழல், வாழ்வதற்கான தண்ணீர் மற்றும் இயற்கை ஆதாரங்கள், கடந்த 10 ஆயிரம் வருடங்களில் உயிர்களின் இருப்பு பற்றி அனைத்தையும் ஆராயவுள்ளது.", என இந்த திட்டம் குறித்து நாசா கூறியுள்ளது. 

முதலில் "ஷாங்க்ரி-லா" மணலில் தரையிறங்கவுள்ள இந்த ட்ரான், அங்குள்ள சுற்றுச்சூழலை ஆராயவுள்ளது. இங்கு துவங்கும் இந்த ட்ரானின் ஆராய்ச்சி பயணம் செல்க் பள்ளத்தாக்கு வரை தொடரும் என நாசா கூறியுள்ளது. இந்த பணியில் 175 கிலோமீட்டர்கள் தூரம் வரை இந்த ட்ரான் பறக்கும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

டைட்டனின் வளிமண்டலம் என்பது பூமியை போலவே, அதிகபடியாக நைட்ரோஜென் வாயுவால் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால், பூமியில் இருப்பதைவிட நான்கு மடங்கு அதிகமான அடர்த்தியை கொண்டுள்ளது. சூரிய குடும்பத்தில், இதுதான் இரண்டாவது மிகப்பெரிய நிலா என்பது குறிப்பிடத்தக்கது. டைட்டன், சூரியனிலிருந்து 1.4 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் மேற்பகுதியில் -179 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை கொண்டுள்ளது.மேலும், இதன் மேற்பரப்பு அழுத்தம், பூமியை விட 50 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: NASA, Titan
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 9 JBL ப்ரோ ஸ்பீக்கர்கள்,10,200mAh பேட்டரியுடன் மோட்டோ பேட் 70 க்ரூவ் இந்தியாவில் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  2. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G விலை, வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் அறிவிப்பு
  3. சோனி WF-1000XM6 உடன் சோனி 1000X தி கலெக்‌ஷன் DSEE அல்டிமேட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  4. ஒன்பிளஸ் N6x இந்தியாவில் 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  5. இந்தியாவில் eSIM மற்றும் பிசிக்கல் சிம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  6. இந்தியாவில் PS5 ஸ்டாண்டர்ட் எடிஷன் விலையை சோனி ரூ. 15,000 உயர்த்தியுள்ளது
  7. ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் நத்திங் ஃபோன் (4a) விலை ரூ. 3,000 உயரும் என தகவல்
  8. ஆசஸ் பேட் இந்திய விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் அறிவிப்பு; ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்குகிறது
  9. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  10. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.