Photo Credit: NASA
நாசா தனது யூரோபா கிளிப்பர் பணியின் அடுத்த கட்ட செயல்திட்டங்களை வெளியிட்டுள்ளது, இறுதியாக வியாழனின் (Jupiter) சந்திரன் யூரோபாவை "ஆழ்ந்த ஆய்வு செய்ய" தயாராகிக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது. கலிலியன் நிலவுக்கான தனது திட்டங்களை அமெரிக்க விண்வெளி நிறுவனம் முதலில் அறிவித்த நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த புதிய மேம்பாடு வெளியாகியுள்ளது. யூரோபா கிளிப்பர் பணி பற்றிய தகவல்கள் ஆரம்பத்தில் 2017 ஆம் ஆண்டில் வெளியானது. இருப்பினும், 2023 ஆம் ஆண்டிலேயே விண்கலம் ஏவுவதற்கு தயாராக இருக்கும் என்று சமீபத்திய அறிவிப்பு குறிப்பிடுகிறது. யூரோபா கிளிப்பர் பணி நாசாவின் மார்ஷல் விண்வெளி விமான மையத்தில் உள்ள கிரக பணிகள் திட்ட அலுவலகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அதன் வளர்ச்சியை கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் வழிநடத்துகிறது.
"இந்த கடல் உலகில் மர்மங்களைத் வெளிப்படுத்துவதற்கு யூரோபா கிளிப்பர் பணியின் மூலம் ஒரு முக்கிய படி முன் நகர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று வாஷிங்டனின் நாசா தலைமையகத்தில் உள்ள அறிவியல் மிஷன் இயக்குநரகத்தின் இணை நிர்வாகி தாமஸ் சுர்பூச்சென் கூறினார்.
முதலில் மார்ச் 2007-ல் அறிவிக்கப்பட்ட யூரோபா கிளிப்பர் பணி, வியாழனின் பனிக்கட்டி நிலவை ஆராய்வதையும், அது வேற்று கிரக வாழ்க்கைக்கு நிலைமைகளை ஏற்படுத்த முடியுமா என்பதை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாசா தனது விண்கலத்தை 2023 ஆம் ஆண்டிற்கு முன்பே தயாரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக தனது பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
முன்னதாக ஜூன் 2015-ல், யூரோபா கிளிப்பர் பணி அதன் வளர்ச்சி கட்டத்தில் நுழைந்தது. நாசா விஞ்ஞானிகளும் யூரோப்பாவில் அதே ஆண்டில் கடல் உப்பு இருப்பதை கண்டறிந்தனர். இதுவே அந்த நிலவின் வாழ்க்கையைப் பற்றிய முதல் கண்டுபிடிப்புகள் மற்றும் கிரகங்களின் வாழ்விடத் துறையில் புதிய யோசனைகள் பற்றிய ஆராய்ச்சியில் முதன்மையானது ஆகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்