விண்ணில் பாயவுள்ள சந்திராயன்-2, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

விண்ணில் பாயவுள்ள சந்திராயன்-2, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

இந்த செயற்கைகோள் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது

ஹைலைட்ஸ்
  • சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படுவது தூர்தர்ஷனில் நெரலையில் ஒளிபரப்பு
  • இஸ்ரோவின் டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கங்களிலும் நேரடி ஒளிப்பரப்பு
  • சதீஷ் தவான் வின்வெளி மையத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது
விளம்பரம்

ஜூலை 15 அன்று ஏற்பட்ட தடையை அடுத்து, இஸ்ரோ நிறுவனம், நிலவிற்கான சந்திராயன் 2 செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவவுள்ளது. இந்த செயற்கைகோள், சரியாக இந்திய நேரப்படி மதியம் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி- மார்க் III ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்தியாவின் இந்த சாந்திராயன் 2 செயற்கைகோள், நிலவின் இதுவரை யாரும் கண்டிராத பகுதியான தென் துருவப் பகுதியை ஆராயவுள்ளது. 

சந்திராயன்-2 எப்போது விண்ணில் பாயவுள்ளது?

சந்திராயன்-2 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி- மார்க் III ராக்கெட் மூலம் இந்திய நேரப்படி இன்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் பாயவுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் வின்வெளி மையத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது. இந்த 'சந்திராயன்-2' செயற்கைக்கோள் முன்று பகுதிகளை கொண்டுள்ளது. ஆர்பிட்டார் (Orbiter), லேண்டெர் - விக்ரம் (Lander-Vikram) மற்றும் ரோவர் - பிரக்யான் (Rover Pragyaan). ஆர்பிட்டார் 8 அறிவியல் சோதனைகளுடன், நிலவை சுற்றி ஒரு வருடத்திற்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளது. ஆர்பிட்டாரிலிருந்து பிரிந்த லேண்டெர், செப்டம்பர் 6, 2019-ல் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லேண்டெரில் உள்ள ரோவர், 14 நாட்கள் நிலவை ஆய்வு செய்யவுள்ளது.

சந்திராயன்-2 விண்ணில் பாயவதை எப்படி நேரலையில் காண்பது?

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் வின்வெளி மையத்திலுள்ள பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து இந்த ராக்கெட் ஏவுதலை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இஸ்ரோ நிறுவனம், இந்த நிகழ்வின் நேரலையை டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் ஒளிபரப்பவுள்ளது. அதுமட்டுமின்றி தூர்தர்ஷன் தொலைக்காட்சியும் யூடூப்பில் இந்த நிகழ்வின் நேரலையை ஒளிபரப்பவுள்ளது. தூர்தர்ஷன் தொலைகாட்சியில் இந்த நேரலை 2:10 மணிக்கு துவங்கவுள்ளது. மேலும், இதன் நேரலை தூர்தர்ஷன் தொலைகாட்சியிலும் நேரடியாக ஒளிப்பரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சந்திரயன் -2 மிஷனின் பிரதான நோக்கம் என்ன?

 'சந்திராயன்-2' செயற்கைக்கோள் முன்று பகுதிகளை கொண்டுள்ளது. ஆர்பிட்டார் (Orbiter), லேண்டெர் - விக்ரம் (Lander-Vikram) மற்றும் ரோவர் - பிரக்யான் (Rover Pragyaan). ஆர்பிட்டார் 8 அறிவியல் சோதனைகளுடன், நிலவை சுற்றி ஒரு வருடத்திற்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளது. ஆர்பிட்டாரிலிருந்து பிரிந்த லேண்டெர், செப்டம்பர் 6, 2019-ல் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கவுள்ளது. மான்சினஸ் சி மற்றும் சிம்பிலியஸ் என் ஆகிய இரண்டு பள்ளங்களுக்கு இடையில் உயர் சமவெளியில் இந்த லேண்டறர் தரையிறங்கவுள்ளது. இந்த லேண்டெர், செப்டம்பர் 6, 2019-ல் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லேண்டெரில் உள்ள ரோவர், 14 நாட்கள் நிலவை ஆய்வு செய்யவுள்ளது.

375 கோடி மதிப்பிலான இந்த 'ஜி.எஸ்.எல்.வி மார்க்-3', 16 நிமிடங்களில் 'சந்திராயன்-2' செயற்கைக்கோளை, அதன் சுற்றுவட்ட பாதைக்குள் செலுத்திவிடும். 640 டன் எடையுள்ள இந்த 'ஜி.எஸ்.எல்.வி மார்க்-3' ஹெவி-லிப்ட் ராக்கெட்டை இஸ்ரோ அதிகாரிகள் 'ஃபேட் பாய்' (Fat Boy) என அழைக்கிறார்கள். தெழுங்கு செய்தி நிறுவனங்களோ, இந்த ராக்கெட்டிற்கு 'பாகுபலி' என பெயர் சூட்டியுள்ளனர். இஸ்ரோவின் தகவலின்படி, 'சந்திராயன்-2' செயற்கைக்கோள், பூமியின் 170x40400 கிமீ சுற்றுவட்ட பாதைக்குள் செலுத்தப்படவுள்ளது.

2,379 கிலோ எடை கொண்ட ஆர்பிட்டார் 100x100 கிமீ நிலவின் சுற்றிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. 1,000 W மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது இந்த ஆர்பிட்டார். அதே நேரம் 1,471 கிலோ எடை கொண்ட லேண்டர், 650W மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 27கிலோ எடை கொண்ட ரோவர் 50W மின்சார உற்பத்தித் திறன் கொண்டுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , ISRO, Lunar Mission, Moon Mission, Chandrayaan, SDSC, Sriharikota
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »