கொரோனா வைரஸ்: இந்தியாவில் N95 முகமூடிகளை நன்கொடையாக வழங்கியது விவோ! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 24 மார்ச் 2020 17:37 IST
ஹைலைட்ஸ்
  • கோவிட்-19 நிவாரண முயற்சிக்கு நேரம் & தகவல்களில் கவனம் செலுத்துகிறது
  • அனைத்து புதிய தயாரிப்பு வெளியீடுகளையும் நிறுத்தியுள்ளதாக விவோ கூறுகிறது
  • லட்சக்கணக்கான N95 முகமூடிகளை ஷாவ்மியும் நன்கொடையாக வழங்கியது

விவோ வி19-ன் அறிமுகத்தையும் விவோ மாற்றியமைத்துள்ளது

சீன கைபேசி தயாரிப்பாளர் விவோ, செவ்வாயன்று அத்தியாவசிய பொருட்களின் தேவையை அறிந்துகொள்ள, அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியாவில் N95 முகமூடிகளை நன்கொடையாக வழங்குவதாகவும் தெரிவித்தது.

"அத்தியாவசிய பொருட்களின் தேவையை அறிய நாங்கள் அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம், அடுத்த சில வாரங்களில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.

"முதல் கட்டமாக, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் N95 முகமூடிகளை வாங்குவதற்கும் நன்கொடை அளிப்பதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்" என்று Vivo இந்தியாவின் பிராண்ட் வியூகத்தின் இயக்குநர் நிபூன் மரியா (Nipun Marya) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, நிறுவனம் தனது வரவிருக்கும் இடைப்பட்ட ஸ்மார்ட்போன் - Vivo V19 - இரட்டை கேமரா பஞ்ச்-ஹோல் மற்றும் குவாட்-கேமரா அமைப்புடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

"இந்த கடினமான காலங்களில், எங்கள் வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள், ஊழியர்கள் மற்றும் சக குடிமக்களின் நல்வாழ்வு எங்கள் முதன்மையாகும். எனவே, இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடும் அதே வேளையில், வி19-ல் இருந்து தொடங்கி எங்கள் புதிய தயாரிப்பு வெளியீடுகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். கோவிட்-19 நிவாரண முயற்சிகளுக்கு எங்கள் நேரம் மற்றும் தகவல்களுக்கு கவனம் செலுத்துகிறோம்", என்று மரியா தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியாவில் லட்சக்கணக்கான N95 முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு அங்கிகளை நன்கொடையாக வழங்குவதாக ஷாவ்மி அறிவித்தது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo, Coronavirus
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜேபிஎல் லைவ் 780என்சி விமர்சனம்: ஒரு முழுமையான தொகுப்பா?
  2. ஆகஸ்ட் 11 வெளியீட்டிற்கு முன்னதாக ரெட்மி K100 ப்ரோ மேக்ஸின் முக்கிய விவரக்குறிப்புகள், அம்சங்கள் கசிந்துள்ளன
  3. ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்: நத்திங் ஃபோன் 4a சீரிஸ், ரெனோ 15 சீரிஸ், மேலும் பல தள்ளுபடியில் வழங்கப்படும்
  4. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: சியோமி பேட் 7, ஒன்பிளஸ் பேட் 2, ரெட்மி பேட் 2 மற்றும் பலவற்றில் சிறந்த சலுகைகள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 40,000-க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள் அறிவிப்பு
  6. சோனி WH-1000XM6 இப்போது இந்தியாவில் ஆலிவ் கிரே வண்ணத்தில் கிடைக்கிறது: விலை, கிடைக்கும் இடம், அம்சங்கள்
  7. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்பிளஸ் 15 சலுகை இது
  8. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026: ரூ. 20,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள்!
  9. ரியல்மி 16x 5G பற்றிய தொகுப்பு: வெளியீட்டுத் தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  10. Poco M8 Power vs OnePlus Nord CE 6 Lite vs Moto G77 Power: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.