ஜிஎஸ்டி சதவிகிதக்குறைப்பால் சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும் என்கிற அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில், இன்னும் சில பொருட்களின் விலை குறைய உள்ளது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த வாரம் நிதியமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. அதன்படி, 50க்கும் மேற்பட்ட பொருட்களின் ஜிஎஸ்டி வரி சதவிகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் மூலம் லித்தியம் பேட்டரி, சிறிய தொலைக்காட்சிகளின் ஜிஎஸ்டி வரி சதவிகிதம் 28% இருந்து 18% குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக்குறைப்பு வருகிற 27ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவிக்கையில், 25 இன்ச் டிவிகள், லித்தியம் பேட்டரி, வாக்குவம் க்ளீனர், வீட்டுசாதன பொருட்கள் போன்றவற்றிற்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கைவினைப் பொருட்களுக்கான சதவிகதமும் 18ல் இருந்து 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்