Photo Credit: Twitter / @manukumarjain
ரெட்மி நோட் 8 சீரிஸ், மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் சீரிஸாக இருந்து வருகிறது. ரெட்மி நோட் 8 சீரிஸின் இரண்டு ஸ்மார்ட்போன்கள் Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஆகும்.
இப்போது, ஷாவ்மி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின், 2019 ஆகஸ்டில் அறிமுகப்படுத்தியதிலிருந்து, இந்த சீரிஸில் மொத்தம் 30 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்களை உலகளவில் விற்பனை செய்துள்ளதாக வெளிப்படுத்தியுள்ளார்.
#RedmiNote8 series: #1 Selling #Android #Smartphone in the World! ????
— Manu Kumar Jain (@manukumarjain) May 6, 2020
3 Crore (= 30M) UNITS SOLD. ????
Let's celebrate! ???? RT with #ILoveRedmiNote and tell me why you love this BEAST!
???? 1500 RTs & I'll #giveaway a RN8
???? 3000 RTs & I'll give a RN8 & #RedmiNote8Pro#Xiaomi ❤️ pic.twitter.com/zInqTgMtxM
இந்தத் சீரிஸை அறிமுகமான ஒரு மாதத்திற்குள், ஷாவ்மி 1 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் விற்றது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவை மனு குமார் ஜெயின் புதன்கிழமை ட்விட்டரில் அறிவித்தார்.
ஆகஸ்ட் 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகளவில் ரெட்மி நோட் 8 சீரிஸின் 10 மில்லியனுக்கும் அதிகமான போன்களை விற்க முடிந்தது என்று ஷாவ்மி டிசம்பர் மாதம் அறிவித்தது. இந்த சீரிஸ் 10 மில்லியனைத் தொடுவதற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் எடுத்ததாக நிறுவனம் கூறுகிறது.
ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஆகியவை இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளன. அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான ரெட்மி நோட் 8 சீரிஸ் போன்களை விற்க முடிந்தது என்று ஷாவ்மி கூறியிருந்தது.
ரெட்மி நோட் 8, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 செயலி, 6 ஜிபி ரேம் மற்றும் நான்கு பின்புற கேமராக்களுடன் வருகிறது. ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இன்று ரூ.10,999-க்கு கிடைக்கிறது.
ரெட்மி நோட் 8 ப்ரோ, மீடியா டெக் ஹீலியோ ஜி 90 டி செயலி மற்றும் 8 ஜிபி ரேம் வரை வருகிறது. இந்த போனில் நான்கு பின்புற கேமராக்கள் உள்ளன. போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.16,999 ஆகும்.
In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்