சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த வாரத்தில் அறிமுகமாக உள்ளது. இதற்கு முன்னாள் வெளியான சியோமி ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் கூடுதல் சிறப்பு அம்சங்களை பெற்றிருக்க வேண்டிய கட்டாயம் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவிற்கு உள்ளது. சீன தயாரிப்பு நிறுவனமான சியோமி இந்த வருடத்தின் தொடக்கத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோவை அறிமுகப்படுத்தியது. அந்த ஸ்மார்ட்போன் கேமிரா, பேட்டரி மற்றும் ப்ராசஸர் தொழில்நுட்ப ரீதியாக அனைத்து துறையிலும் சிறந்து விளங்கியது. இதற்கிடையில், தற்போது இந்நிறுவனம் ரெட்மி நோட் 6 ப்ரோவை இன்னும் இரு தினங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் கேமிரா மற்றும் டிஸ்பிளேயில் ஒரு சில மாறுதல்களை மட்டுமே செய்துள்ளது.
புதிய ரெட்மி நோட் 6 ப்ரோவின் முன்பக்கம் இரண்டு கேமிராக்கள் உள்ளன. 19:9 என்ற வீதத்தில் நாட்சுடன் கூடிய பெரிய டிஸ்பிளே மற்றும் ஏஐ-யுடன் கூடிய அம்சங்கள். இதற்கு முந்தைய சியோமி மாடல் ஸ்மார்ட்போனில் இருந்த அதே ஸ்நாப்டிராகன் 636 SoC ப்ராசஸர் தான் ரெட்மி நோட் 6 ப்ரோவில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனினை பிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளத்தில் நவம்.23 ஆம் தேதியிலிருந்து மதியம் 12 மணிக்கு வாங்க ஆரம்பிக்கலாம். ரெட்மி நோட் 6 ப்ரோவினை நீங்கள் வாங்குவதற்கு ஏற்ற 5 முக்கிய காரணங்களைக் கொண்டுள்ளது. அவை,
பெரிய மற்றும் பிரகாசமான டிஸ்பிளே
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவில் 6.26 இன்ச் ஃபுல் ஹெச்டி+ஐபிஎஸ் எல்.இ.டி ஸ்கீரின் டிஸ்பிளே 1080*2280 பிக்சலைக் கொண்டது. இதன் பிரகாசம் 500 என்.ஐ.டிஎஸ் ஆகும். 19:9 என்ற வீதத்தில் டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே ரெட்மி நோட் 5 ப்ரோவினை விட பெரியதாகும்.
பி2ஐ கோட்டிங்
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ திரவத்தை விரட்டும் நானோதொழில்நுட்பம் கொண்ட பி2ஐ சான்றிதழை பெற்றுள்ளது.
நான்கு கேமிராக்கள்
ரெட்மி நோட் 6 ப்ரோவில் சியோமி முக்கியமான ஒன்றை அப்கிரேட் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. அது எதுவென்றால் முன்பக்கத்திலிருக்கும் செல்ஃபி கேமிரா இரட்டை கேமிரா ஆகும். இந்நிறுவனம் முன் பக்கம் இரு கேமிரா பின்பக்க இரு கேமிரா கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். முன்பக்கம் இருக்கும் கேமிரா 20 மெகா பிக்சலுடன் பிரைமரி சென்சாரைக் கொண்டுள்ளது மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட செகண்டரி சென்சாருடன் 4இன் 1 சூப்பர் பிக்சல் மற்றும் ஏஐ ஃபேஸ் அனலாக் வசதியைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாருடன் 1.4 மைக்ரான் பிக்சல் மற்றும் ஏஐ 2.0-வைக் கொண்டுள்ளது.
இரண்டு வேரியண்ட்கள்
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ தாய்லாந்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 4ஜிபி ரேம்/ 64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் வேரியண்டினைக் கொண்டது. சியோமி நிறுவனம் கேட்ஜெட் 360க்கு அளித்த தகவின் படி அந்நிறுவனம் இந்திய சந்தையில், ரெட்மி நோட் 6 ப்ரோவினை இரு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தும். சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ 6ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட ஸ்மார்ட்போனும் வெளியாக உள்ளது. ப்ராசஸர் மற்றும் பேட்டரியில் எந்த மாறுபாடும் இல்லை. ரெட்மி நோட் 6 ப்ரோ 14nm ஆக்டோ-கோர் குவால்கம் ஸ்நாப்டிராகன் 636 SoCயில் இயங்கும். 4000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
எம்.ஐ.யு.ஐ 10
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ எம்.ஐ.யு.ஐ 10-ல் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. ரெட்மி நோட் 6 ப்ரோவில் ரேம் கிளினர், செக்கியூரிட்டி ஸ்கேனர், பேட்டரி மேனேஜர் மேலும் பலவற்றைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்