நீண்ட நாட்கள் எதிர்பார்ப்புக்கு பிறகு Redmi 9A இன்று அறிமுகம்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 2 செப்டம்பர் 2020 16:26 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி 9A கடந்த ஜூன் மாதம் மலேசியாவில் அறிமுகமானது
  • இந்தியாவில் இன்று (செப்.2) அறிமுகமாகிறது
  • ரெட்மியின் யூடியூப் பக்கத்தில் நேரலையாகப் பார்க்கலாம்

இன்று மதியம் 12 மணிக்கு ரெட்மி 9A அறிமுகம்

ரெட்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரெட்மி 9A ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமாகிறது. 

இந்தியாவில் இன்று (செப்.2) ரெட்மி 9A ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுகிறது. ரெட்மி 9, ரெட்மி 9 பிரைம் ஆகிய ஸ்மார்ட்போன்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது ஸ்மார்ட்போனாக ரெட்மி 9A அறிமுகமாகிறது. 

இதில் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச், 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ணமுன்னதாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரெட்மி 8A அறிமுகமானது. அதேபோன்று இந்தாண்டு தற்போது செப்டம்பர் மாதம் ரெட்மி 9A அறிமுகம் செய்யப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் அறிமுக நிகழ்வை ரெட்மியின் யூடியூப் பக்கத்தில், இன்று மதியம் 12 மணிக்கு நேரலையாகப் பார்க்கலாம்.

ரெட்மி 9A எதிர்பார்க்கப்படும் விலை:

மலேசியாவில் 2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9A ஸ்மார்ட்போன் MYR 359 (இந்திய மதிப்பில் ரூ. 6,300) விலைக்கு அறிமுகமானது. அதே போல், தான் இந்தியாவிலும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் ரெட்மி 9C ஸ்மார்ட்போன் MYR 429 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7,500) விலைக்கு மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

ரெட்மி 9A - எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

ரெட்மி 9A ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.53 இன்ச் திரை, டூயல் சிம் ஸ்லாட் இருக்கலாம். மீடியாடெக் ஹீலியோ G25 SoC பிராசரும் எதிர்பார்க்கப்படுகிறது.  கேமராவைப் பொருத்தவரையில், முன்பக்கத்தில்  8 மெகா பிக்சலுடன் கூடிய செல்ஃபி கேமரா இருக்கலாம். பின்பக்கத்தில் 13MP பிரைமரி கேமராவும், 5MP வைட் ஆங்கிள் கேமராவும் இருக்கலாம்.

Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi 9A price in India, Redmi 9A specifications, Redmi 9A, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.