Photo Credit: Weibo
சியோமி நிறுவனம், தன் புதிய ஸ்மார்ட்போன்களான 'Mi CC9 மற்றும் Mi CC9e' ஆகிய ஸ்மார்ட்போன்களை ஜூலை 2-ல் சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக, இந்த ஸ்மார்ட்போன் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிற்ப்பம்சத்தை சியோமி நிறுவனம் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் பின்புற கேமராவை கொன்டிருக்கும. மேலும் , செல்பிக்கள் எடுக்க 32 மெகாபிக்சல் அளவிலான முன்புற கேமராவை கொண்டிருக்கும் என அறிவித்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களின்படி இந்த ஸ்னார்ட்போன் 3 பின்புற கேமராக்களை கொன்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தனது வெய்போ கணக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்த சியோமி, Mi CC9 48 மெகாபிக்சல் பின்புற கேமராவையும், 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொன்டிருக்கும் என குறிப்பிட்டிருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 2-ல் அறிமுகமாகும் எனவும் குறிப்பிட்டிருந்தது. இந்த Mi CC ஸ்மார்ட்போன்கள் இளைஞர்களை மையப்படுத்தி வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தனது ட்விட்டர் கணக்கில் தொழில்நுட்ப வல்லுனரான முகில் சர்மா (Mukul Sharma) இந்த ஸ்மார்ட்போனின் வகைகள் குறித்தும் அதன் விலை குறித்தும் தகவல்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mi CC9 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் விலை!
இந்த ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட Mi CC9 ஸ்மார்ட்போனின் விலை 2,599 யுவான்கள் (26,200 ரூபாய்). 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு அளவு கொண்ட மற்ற இரு வகைகளும் 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 3,099 யுவான்கள் (31,300 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mi CC9e ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் விலை!
Mi CC9 ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் மற்றொரு ஸ்மார்ட்போனான Mi CC9e-யும் மூன்று வகைகளிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு, 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு என்ற இந்த மூன்று வகைகள் 1,599 யுவான்கள் (16,100 ரூபாய்), 1,899 யுவான்கள் (19,200 ரூபாய்) மற்றும் 2,199 யுவான்கள் (22,200 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mi CC9 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!
Mi CC9 ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன், ஸ்னெப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகலாம். மூன்று பின்புற கேமராக்களுடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் என்ற அளவில் மற்ற இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டிருக்கும். இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டை-C சார்ஜிங் போர்டுடன் 4000mAh பேட்டரி, 27W சார்ஜர் பொன்றவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என அவர் தகவல் வெளியிட்டிருந்தார்.
Mi CC9e ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!
Mi CC9e ஸ்மார்ட்போன் 5.97 இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன், ஸ்னெப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகலாம். மூன்று பின்புற கேமராக்களுடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என்ற அளவில் மற்ற இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 3500mAh பேட்டரி, 18W சார்ஜர் பொன்றவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என அவர் தகவல் வெளியிட்டிருந்தார். Mi CC9 போலவே இந்த ஸ்மார்ட்போனும் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டை-C சார்ஜிங் போர்டுடன் வெளியாகலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்