இன்று அறிமுகத்திற்கு தயாராக உள்ள Mi 9T, Mi 9T Pro: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

இன்று அறிமுகத்திற்கு தயாராக உள்ள Mi 9T, Mi 9T Pro: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

Photo Credit: Twitter/ Xiaomi

இன்று அறிமுகாகிறது Mi 9T ஸ்மார்ட்போன்கள்

ஹைலைட்ஸ்
  • Mi 9T ஸ்மார்ட்போன்கள் இன்று உலக அளவில் அறிமுகமாக தயாராக உள்ளது
  • மேட்ரிட், மிலான் மற்றும் பாரிஸ் என மூன்று இடங்களில் அறிமுக நிகழ்வு
  • இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஜூலையின் இடையில் அறிமுகமாகவுள்ளது
விளம்பரம்

சியோமி நிறுவனம், தனது ஸ்மார்ட்போனான Mi 9T, Mi 9T Pro ஆகிய ஸ்மார்ட்போன்களை உலக அளவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இந்த '9T' ஸ்மார்ட்போன்கள் முன்னதாக சீனாவில் அறிமுகமான ரெட்மீ K20 தொடர் ஸ்மார்ட்போன்கள் போன்றே அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் அறிமுகமாகவுள்ள இந்த 9T ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வை மேட்ரிட், மிலான் மற்றும் பாரிஸ் என மூன்று இடங்களில் ஏற்பாடு செய்துள்ளது சியோமி நிறுவனம். முன்னதாக இந்த 9T ஸ்மார்ட்போன்கள் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட், NFC தொழில்நுட்பம், பாப்-அப் செல்பி கேமரா, 3.5mm ஹெட்போன் ஜாக் என பல அம்சங்களை கொண்டுள்ளது என சியோமி நிறுவனம் டீசர்கள் வாயிலாக அறிவித்திருந்தது.

இந்த  Mi 9T, Mi 9T Pro ஸ்மார்ட்போன்கள் முன்னதாகவே பல ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், இந்த ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களை வைத்து பார்க்கையில், இது ரெட்மீ K20 ஸ்மார்ட்போன்களின் மாற்றியமைக்கப்பட்ட வகைகள் போலவே தெரிகிறது.

சியோமி Mi 9T, Mi 9T Pro ஸ்மார்ட்போன்கள்: எதிர்பார்க்கப்படும் விலை!

இந்த ஸ்மார்ட்போன், ஏற்கனவே டெல்ஷாப் என்ற பல்கேரிய தளத்தில், Mi 9T விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு என ஒரே வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை, அந்த தளத்தில் 769.90 பல்கேரியன் லேவ் (30,900 ரூபாய்). இந்த ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் கிடைக்கும் எனவும் அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக வெளியான Mi 9T-யின் சீன வெர்ஷனான ரெட்மீ K20 மூன்று வகைகளில் அறிமுகமானது. 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும்  8GB RAM + 256GB சேமிப்பு அளவு என்ற மூன்று வகையிலான இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 1,999 யுவான்கள் (20,200 ரூபாய்), 2,099 யுவான்கள் (21,200 ரூபாய்) மற்றும் 2,599 யுவான்கள் (26,200 ரூபாய்).

மற்றோரு ஸ்மார்ட்போனான Mi 9T Pro-வின் விலை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால், முன்னதாகவே இதன் சீன வெர்சனான ரெட்மி K20 Pro நான்கு வகைகளில் அறிமுகமாகியது. அதன்படி 6GB RAM + 64GB சேமிப்பு அளவு வகையின் விலை, 2,499 யுவான்கள் (25,200 ரூபாய்). 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மேலும் மூன்று வகைகளில் வெளியாகிய இந்த ஸ்மார்ட்போன், அதன் விலைகளை 2,599 யுவான்கள்(26,200 ரூபாய்), 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 2,999 யுவான்கள் (30,200 ரூபாய்) என கொண்டுள்ளது.

Mi 9T Pro ஸ்மார்ட்போன்: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!

ரெட்மீ K20 Pro போன்றே அமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த Mi 9T Pro ஸ்மார்ட்போன், இரண்டு நானோ சிம் வசதி, அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு இயங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் பொன்ற திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டிருக்கும். மேலும், இதன் முன்புறத்தில் 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமராவை கொண்டிருக்கும் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

Mi 9T ஸ்மார்ட்போன்: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!

டெல்ஷாப் என்ற பல்கேரிய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த Mi 9T ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், ரெட்மீ K20-யின் சிறப்பம்சங்கள் போலவே உள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ரெட்மீ K20 Pro போன்றே இரண்டு நானோ சிம் வசதி, அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு இயங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் பொன்ற திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டிருக்கும். அடுத்ததாக 13 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் கேமராக்களை கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது மேலும், இதன் முன்புறத்தில் 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமராவை கொண்டிருக்கும் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. ரூபாய் 1 லட்சத்துக்கு கீழ் பட்ஜெட்டில் தரமான லேப்டாப் வேண்டுமா
  2. பட்ஜெட் விலையில் கிடைக்கும் Air Conditioners இப்போ விட்டா அவ்வளோ தான்
  3. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு Amazon Great Republic Day Sale 2025 ஆபர்
  4. Amazon Great Republic Day Sale 2025: ஸ்மார்ட் டிவிகளில் அதிரடி விலைகுறைப்பு
  5. Amazon Great Republic Day Sale 2025 விற்பனையில் அடித்து தூக்கும் டேப்லெட்கள்
  6. Amazon Great Republic Day Sale 2025 விற்பனையில் அடித்து தூக்கும் டேப்லெட்கள்
  7. iQOO Z10 Turbo, iQOO Z10 Turbo Pro செல்போனில் இத்தனை ரகசியம் இருக்காம்
  8. Huawei Band 9 வாட்ச் நீங்க நீச்சல் அடிச்சல் கூட இது கண்காணிக்குமாம்
  9. என்னங்க சொல்றீங்க 2 ஆண்டுகளுக்கு YouTube Premium தரும் ஜியோ
  10. சாம்சங் இப்படிப்பட்ட அம்சத்துடனா இந்த செல்போனை வெளியிடுது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »