கொரோனா வைரஸ்: தேசிய ஊரடங்கு காரணமாக எம்ஐ 10 வெளியீடு ஒத்திவைப்பு! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 26 மார்ச் 2020 11:12 IST
ஹைலைட்ஸ்
  • திருத்தப்பட்ட வெளியீட்டு தேதி விரைவில் வெளியிடப்படும் - ஷாவ்மி
  • ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் முதல் விற்பனையும் ஒத்திவைக்கப்பட்டது
  • ரியல்மியும் தனது நார்சோ தொடர் வெளியீட்டு நிகழ்வை ரத்து செய்துள்ளது

எம்ஐ 10 சீனாவில் பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய ஊரடங்கிற்கு உத்தரவிட்டதை அடுத்து, ஷாவ்மி தனது முதன்மை எம்ஐ 10 போனை இந்தியாவில் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. நிலைமையை மதிப்பீடு செய்து, திருத்தப்பட்ட வெளியீட்டு தேதியை விரைவில் வெளியிடுவதாக நிறுவனம் கூறுகிறது. இந்த போன் பிப்ரவரியில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது மார்ச் 31-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருந்தது. இருப்பினும், பல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இப்போது நாட்டில் வெளியீட்டு நிகழ்வுகளை ரத்து செய்து வருகின்றனர். நாடு தற்போது 21 நாள் முழுமையான ஊரடங்கின் கீழ் உள்ளது, அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே இப்போது விற்க அனுமதிக்கப்படுகின்றன.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில், தேசத்தை ஆதரிப்பதற்காக அதன் ஆற்றலை மையமாகக் கொண்டுள்ளது என்று Xiaomi கூறுகிறது. ஷாவ்மி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயினும் Twitter-ல் Mi 10 வெளியீட்டு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 9 Pro Max-ன் முதல் விற்பனையையும், அரசு விதித்த இயக்கம் கட்டுப்பாட்டையும் தொழில்நுட்ப நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. Redmi Note 9 Pro கடைசியாக மார்ச் 24 அன்று கிடைத்தது, அதன் பிறகு புதிய ஃபிளாஷ் விற்பனை தேதி அறிவிக்கப்படவில்லை.

ஷாவ்மியைத் தவிர, ரியல்மியும் தற்போது இந்தியாவில் அதன் அனைத்து வெளியீட்டையும் நிறுத்தியுள்ளது. Realme Narzo 10 மற்றும் Realme Narzo 10A போன்கள் நாளை அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இந்த நிகழ்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவோ போன்ற பிராண்டுகளும் தங்களது மார்ச் வெளியீடுகளை இப்போது ஏப்ரல் மாதத்தில் மாற்றுவதாக அறிவித்துள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Attractive design
  • Very good performance
  • Fast wireless charging
  • Good camera performance
  • Vivid 90Hz display
  • Speedy face recognition
  • Bad
  • Fingerprint unlock isn’t quick
  • Gets hot easily
  • No IP rating
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 13-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4780mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Mi 10, Mi 10 India Launch, Mi 10 Specifications, Coronavirus, COVID 19
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. யாருப்பா அது பட்ஜெட்ல ஐபோன் கேட்டது? iPhone 16e விலையில் ரூ.11,500 வரை டிஸ்கவுண்ட்! Apple Intelligence வசதியுடன் செம டீல்
  2. S25 சீரிஸ் வந்தா என்ன, எங்களுக்கு ராஜா 'S24 Ultra' தான்! பிளிப்கார்ட்ல ரூ.25,000-க்கு மேல விலை குறைஞ்சிருக்கு
  3. பட்ஜெட்ல ஒரு 'Ultra' போன் வேணுமா? Vivo T4 Ultra இப்போ செம சீப்! பிளிப்கார்ட் ஆஃபர்ல அள்ளிட்டு போங்க!
  4. S25-க்கே இன்னும் வழிய காணோம்.. அதுக்குள்ள S26 லீக்ஸ் வந்துடுச்சா? 50MP கேமராவுடன் களமிறங்கும் Samsung
  5. சாம்சங்-கின் அடுத்த அதிரடி! பட்ஜெட் விலையில் 5G போன் வேணுமா? Galaxy F70e-க்காக கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
  6. ஆப்பிள் கிட்ட இப்போ 250 கோடி டிவைஸ்கள் இருக்கு! அதுவும் இந்தியா தான் அவங்களோட 'ஃபேவரைட்' இடமாம்
  7. விலை குறைப்புனா இதுதான் விலை குறைப்பு! Samsung Galaxy S24 இப்போ ரூ.31,000 தள்ளுபடியில் அமேசானில் கிடைக்குது
  8. ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஜாக்பாட்! 6,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 Gen 3 சிப்செட் - இப்போ செம மலிவான விலையில்
  9. ரெட்மி-க்கு செம டஃப்! பட்ஜெட் விலையில பிரீமியம் அம்சங்களை அள்ளித் தெளிக்கும் Moto G67 & G77 - நீங்க எதை வாங்குவீங்க?
  10. போனுக்குள்ளேயே ஃபேனா? 7000mAh பேட்டரி வேறயா! பட்ஜெட் விலையில் பிளாக்ஷிப் கேமிங் போன் - REDMAGIC 11 Air வந்தாச்சு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.