சலுகையை பெறும் ரெட்மீ நோட் 7S, நோட் 7 Pro, இது சியோமியின் சுதந்திர தின விற்பனை!

சலுகையை பெறும் ரெட்மீ நோட் 7S, நோட் 7 Pro, இது சியோமியின் சுதந்திர தின விற்பனை!

Photo Credit: Twitter/ Redmi India

ரெட்மீ நோட் 7 Pro எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை பெற்றுள்ளது

ஹைலைட்ஸ்
  • 3GB / 32GB வகை ரெட்மீ நோட் 7S-ன் விலை 9,999 ரூபாய்
  • ரெட்மீ 7-ன் 2GB RAM / 32GB சேமிப்பு வகை 7,499 ரூபாய்
  • ரெட்மீ Y2 4GB RAM + 64GB சேமிப்பு வகை 7,999 ரூபாய்க்கு கிடைக்கப்பெறும்
விளம்பரம்

சியோமி இந்தியா நிறுவனம் சுதந்திர தின விற்பனையை அறிவித்துள்ளது. Mi.com தளத்தில் நடைபெறும் இந்த விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 11 வரை தொடரும். இதுமட்டுமின்றி பிளிப்கார்ட்டில் நடைபெறவுள்ள நேஷனல் ஷாப்பிங் டேஸ் விற்பனையின் போதும் தனது தயாரிப்புகளை சலுகைகளுடன் பட்டியலிட்டுள்ளது சியோமி நிறுவனம். இந்த விற்பனை ஆகஸ் ட் 8-ல் துவங்கி ஆகஸ்ட் 10 வரை நடைபெறும். ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 11 வரை அமேசான் ப்ரீடம் சேல் திட்டமிடப்பட்டுள்ளது. அமேசானில் சியோமி ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.

ரெட்மீ நோட் 7S, ரெட்மி நோட் 7 Pro

இந்த விற்பனையில் ரெட்மீ  நோட் 7S மற்றும் ரெட்மீ நோட் 7 Pro ஆகியவை சலுகைகளுடன் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி 3GB / 32GB வகை ரெட்மீ நோட் 7S-ன் விலை 9,999 ரூபாய், மற்றும் ரூ. 4GB / 64GB வகையின் விலை 11,999 ரூபாய். அதாவது ரெட்மீ நோட் 7S விலை 1,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ரெட்மீ நோட் 7 Pro 4GB RAM + 64GB சேமிப்பு வகையின் விலை 12,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM + 64GB சேமிப்பு அளவிலும் கிடைக்கும், இதன் விலை 13,999 ரூபாய் மற்றும் இந்த வரிசையில் டாப்-மாடலான 6GB RAM + 128GB சேமிப்பு அளவு வகை இந்த விற்பனை காலத்தில் 15,999 ரூபாய்க்கு கிடைக்கப்பெரும். இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட் மற்றும் Mi.com தளங்களில் கிடைக்கப்பெறும்.

ரெட்மீ 7

இந்த விற்பனை காலத்தில், ரெட்மீ 7-ன் 2GB RAM / 32GB சேமிப்பு வகை 7,499 ரூபாய் என்ற விலையிலும், 3GB RAM / 32GB சேமிப்பு வகை 8,499 ரூபாய் என்ற விலையிலும் கிடைக்கப்பெறும். இது அமேசான் மற்றும் Mi.com தளங்களில் காமட் ப்ளூ, எக்லிப்ஸ் பிளாக் மற்றும் லூனார் ரெட் ஆகிய வண்ணங்களில் விற்பனையாகும். 

ரெட்மீ Y3

ரெட்மீ Y3 ஸ்மார்ட்போனும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு மாடலுக்கு 8,999 ரூபாயும், 4GB RAM + 64GB சேமிப்பு வகைக்கு 10.999 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு வகைகளும் போல்ட் ரெட், நேர்த்தியான நீலம் மற்றும் பிரைம் பிளாக் வண்ணகளில் வருகின்றன. ஸ்மார்ட்போனை அமேசான் மற்றும் Mi.com வழியாக வாங்கலாம். 

ரெட்மீ Y2

10.999 ரூபாயிற்கு பதில் ரெட்மீ Y2 4GB RAM + 64GB சேமிப்பு வகை 7,999 ரூபாய்க்கு கிடைக்கப்பெறும். இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் Mi.com தளங்களில் கிடைக்கும். 

இதேபோல், ரெட்மீ நோட் 6 Pro 4GB RAM + 64GB சேமிப்பு வகை 13.999 ரூபாயிற்கு பதிலாக 12,999 ரூபாயிற்கு விற்பனையாகிறது.


சியோமி Mi A2

சியோமி Mi A2 4GB RAM + 64GB சேமிப்பு வகை 8,999 ரூபாய் என்ற விலையில் விற்பனை. முன்னதாக இதன் கடைசி விலைக் குறைப்புக்குப் பிறகு, இந்த ஸ்மார்ட்போன் 11.999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிக்கொண்டிருந்தது. 

ரெட்மி 6 (3GB RAM + 64GB) 6,999 ரூபாய், ரெட்மி 6 Pro (4 GB RAM + 64 GB) 9,999 ரூபாய், மற்றும் ரெட்மி 6A (2GB RAM + 32GB) 5,999 ரூபாய் என்ற விலைகளில் விற்பனை.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »