ஷாவ்மி நிறுவனம், திபாளவளியையொட்டி Diwali With Mi சிறப்பு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது எந்தெந்த போன்களுக்கு எவ்வளவு விற்பனை என்பது குறித்தான தகவல்களை தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரெட்மி K20, ரெட்மி K20 ப்ரோ, ரெட்மி நோட் 7 ப்ரோ, போகோ F1, ரெட்மி 7, ரெட்மி 7A, ரெட்மி Y3, ரெட்மி கோ உள்ளிட்ட போன்கள் அதிரடி ஆஃபர்கள் பெற உள்ளன. சில எம்ஐ டிவிகளுக்கும், எம்ஐ ஸ்மார்ட் வாட்டர் ப்யூரிஃபையர், எம்ஐ ஸ்மார்ட் பேண்ட் 4 உள்ளிட்ட சாதனங்களுக்கும் தள்ளுபடி கொடுக்கப்படும் என்று ஷாவ்மி கூறியுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனைக்காக எச்டிஎப்சி வங்கியுடன் கூட்டு வைத்துள்ளது ஷாம்மி. இதன் மூலம் 10 சதவிகித கேஷ்-பேக் ஆஃபரும் கொடுக்கப்பட உள்ளது. இந்த மொத்த விற்பனையும் எம்ஐ.காம் தளத்தில் மட்டும்தான் நடக்கும் என்றாலும், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களிலும் விலை குறைப்பு பிரதிபலிக்கும். செப்டம்பர் 28 ஆம் தேதி ஆரம்பிக்கும் இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 4 வரை நடக்கும்.
Diwali With Mi சேல்: மொபைல்களுக்கான ஆஃபர் விவரம்
மிகவும் பிரபலமான ரெட்மி K20 போனுக்கு 2,000 ரூபாய் விலை குறைக்கப்படும். 6ஜிபி + 64ஜிபி மாடல், 19,999 ரூபாய்க்குக் கிடைக்கும். அதேபோல ரெட்மி K20 ப்ரோ போனின் 6ஜிபி + 128ஜிபி வகைக்கு 3,000 ரூபாய் குறைக்கப்பட்டு 24,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
போகோ F1-ன் 64ஜிபி, 128ஜிபி, 256ஜிபி வகை போன்கள் முறையே ரூ.14,999, ரூ.15,999, ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த போன்களுக்கு 4,000 ரூபாய் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர அமேசான் பே மூலம் F1-ஐ வாங்கினால் கூடுதலாக 1,000 ரூபாய் தள்ளுபடியையும் பெறலாம். 128ஜிபி மாடலுக்கு மட்டுமே இது பொருந்தும்.
ரெட்மி நோட் 7 ப்ரோவின் 4ஜிபி + 64ஜிபி மாடல் 13,999 ரூபாய்க்குக் கிடைக்கும். 6ஜிபி + 64ஜிபி மாடல், 14,999 ரூபாய்க்குக் கிடைக்கும். இந்த போனுக்கு 2,000 ரூபாய் ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 7S-ன் 3ஜிபி + 32ஜிபி வகை போன், 8,999 ரூபாய்க்கும், 4ஜிபி + 64ஜிபி வகை போன் 9,999 ரூபாய்க்கும் இந்த தள்ளுபடி விற்பனையில் கிடைக்கப் பெறும். இந்த போன்களுக்கு முறையே 2,000 ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் போனான ரெட்மி கோ-விற்கு 300 ரூபாய் விலை குறைப்பு கொடுக்கப்படும். இதன் மூலம் 4,299 ரூபாய்க்கு அது விற்கப்படும். ரெட்மி Y3 போனின் 3ஜிபி + 32ஜிபி வகை 7,999 ரூபாய்க்கே வாங்க முடியும். இந்த போன், 2,000 ரூபாய் தள்ளுபடி பெறும்.
அதேபோல ரெட்மி 7A-வின், 2ஜிபி + 16ஜிபி போன், 4,999 ரூபாய்க்கும், 2ஜிபி + 32ஜிபி போன், 5,799 ரூபாய்க்கும் கிடைக்கும். இந்த இரண்டு போன்களுக்கும் முறையே 1,000 ரூபாய் தள்ளுபடி உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்