Photo Credit: WABetaInfo
WhatsApp அப்டேட்டில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் Dark Theme விரைவில் iOS போன்களில் இடம் பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்துடன் எதிர்பார்க்காத வகையில் NetFlix –ல் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றின் ட்ரெய்லர்களை, நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பார்க்கும் வசதியும் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட iOS இயங்கு தளத்தின் அடிப்படையில் ஆப்பிளின் ஐ. போன்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு, WhatsApp முன்னுரிமை அளித்து அப்டேட்டுகளை செய்திருக்கிறது. இதேபோன்று ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் செல்போன்களுக்காக WhatsApp Beta வெர்ஷனும் வெளியாகி இருக்கிறது. இந்த Beta வெர்ஷனிலும் Dark Theme இடம்பெற்றுள்ளது.
iOS போன்களில் டார்க் தீமை பெறுவதற்கு 3 உறுதிப்பாடுகளை (Configuration) செய்ய வேண்டும். ஆனால் முழுமையாக பயன்பாட்டிற்கு வராத நிலையில் தற்போது 2 உறுதிப்பாடுகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்களில் Dark Theme கள், மிக மெல்லிய கருப்பு நிழலால் மட்டுமே வித்தியாசம் காணப்படுகின்றன.
.
WhatsApp –ன் இன்னொரு அட்டகாசமான அப்டேட் என்பது NetFlix ட்ரெய்லர் வசதியாகும். உலகின் முன்னணி இணைய தள பொழுதுபோக்கு நிறுவனமாக NetFlix உள்ளது. இந்தியாவிலும் இதன் பயனாளிகள் அதிகரித்து வருகின்றனர். ஒரு மாதத்திற்கு இதன் சேவையை இலவசமாக பார்க்கும் நிலையில், மாத கட்டணமாக ரூ. 199-லிருந்து ப்ளான்களை நெட்ஃப்ளிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
இந்த நிலையில், WhatsApp –ன் புதிய அப்டேட்டாக NetFlix –ல் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸின் ட்ரெய்லர்களை பார்க்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. பயனாளி ஒருவர் ட்ரெய்லரை ஷேர் செய்யும்போது, அது பெரிய Thmbnail ஆக தோற்றம் அளித்து, வீடியோ Playஆகும். இருப்பினும் இந்த வசதியும் iOS ஆப்பிள் போன்களில் மட்டுமே வந்துள்ளது.
ஆண்ட்ராய்டு Beta WhatsApp – ல் புதிய வசதிகள் சில வந்தபோதிலும், நெட்ஃப்ளிக்ஸ் ட்ரெய்லர் வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. ஆப்-யை லாக் செய்யும்போது, லேசாக ஆப்-ன் நிறம் மாறிக் கொள்ளும். இந்த வசதிதான் ஆண்ட்ராய்டு WhatsApp Beta வெர்ஷனில் குறிப்பிடும்படி உள்ளது.
பல்வேறு காரணங்களுக்காக Dark Theme வசதியை தற்காலிகமாக WhatsApp நிறுத்தி வைத்துள்ளது. Beta பயனாளிகளும் இதனை தற்போதைக்கு பயன்படுத்த முடியாது என்பதே நிலைமை.
Editor's note: A previous version of this article incorrectly mentioned that the Netflix feature was reproducible by us. The error is regretted.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்