விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் இதுவரை பல முறை நாங்கள் வெளியிட்டுள்ளோம். மேலும் விவோ நிறுவனத்தின் இந்த தயாரிப்பான விவோ வி15 ப்ரோ வரும் மார்ச் மாதம் முதல் வாரம் விற்பனைக்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை:
இந்தியாவில் விற்பனைக்கு விரைவில் வெளியாகும் இந்த விவோ வி15 ப்ரோ ரக ஸ்மார்ட்போன் ரூபாய் 28,990 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 6ஜிபி ரேம்/128ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் டோபாஸ் ப்ளூ மற்றும் ரூபி ரெட் ஆகிய நிறங்களில் வெளிவர உள்ளது. ஃபிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மால், ஸ்னாப்டீல் மற்றும் விவோ இந்தியா போன்ற இணையதளங்களில், இந்த போன் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்கப்படுகிறது. இன்று முதல் இந்த போனுக்கான முன்பதிவுக்கு தொடங்கியுள்ளது.
அறிமுக விழா தள்ளுபடியாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி 5% கேஷ்பேக்கும், ஒருமுறை திரை பழுதுபார்த்துத் தரும் வசதியும் செய்து தருகிறது.
விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் அமைப்புகள்:
கடந்த ஆண்டு வெளியான நெக்ஸ் வகை போனைப் போல இந்த விவோ வி15 ப்ரோ போனிலும் பாப் ஆப் செல்ஃபி கேமராக்கள் இடம்பெற்றுள்ளன.
‘ஐந்தாவது தலைமுறை' ஃபிங்கர் பிரின்ட் சென்சார், முகத்தை வைத்து போனை திறக்கும் வசதி என பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போன். மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பையில் (Pie) இந்த ஸ்மார்ட்போன் இயங்குகின்ற நிலையில், அமோலெட் திரை ஆக்டோ கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் ஓ.எஸ். பொருத்தப்பட்டுள்ளது.
மூன்று பின்புற கேமாரக்கள் (48 மெகா பிக்சல் முதல்நிலை சென்சார், 12 மெகா பிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 8 மெகா பிக்சல் கடைநிலை சென்சாருடன்) மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்டுள்ளது. இத்துடன் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : எதிர்பார்ப்பை கிளப்பிய சியோமியின் 'எம்ஐ 9' இன்று ரிலீஸ்!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்