4,500எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமானது விவோ எஸ்6 ! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 1 ஏப்ரல் 2020 11:35 IST
ஹைலைட்ஸ்
  • விவோ எஸ் 6 எக்ஸினோஸ் 980 ஆக்டா கோர் பிராசசரால் இயக்கப்படுகிறது
  • இந்த போன் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது
  • விவோ எஸ் 6, 8 ஜிபி ரேம் & 256 ஜிபி வரை இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது

விவோ எஸ் 6 பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது

விவோவின் சமீபத்திய ஸ்மார்ட்போனான விவோ எஸ் 6 சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 5ஜி ஆதரவு போனாகும். இந்த போனில், வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் டிஸ்பிளே உள்ளது. மேலும், ஒரு பெரிய 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. 


விவோ எஸ் 6 விலை:

சீனாவில் Vivo S6-ன் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை சிஎன்ஒய் 2,698 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.28,700) ஆகும். போனின் 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை சிஎன்ஒய் 2,998 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.31,900) ஆகும். இந்த போன் ஏப்ரல் 3 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். விவோ எஸ் 6 ஸ்வான் லேக், டானூப் மற்றும் ஜாஸ் பிளாக் ஆப்ஷன்களில் வெளியிடப்படும்.


விவோ எஸ் 6 விவரக்குறிப்புகள்: 

விவோ எஸ் 6 டூயல்-சிம் (நானோ) ஸ்டாட்டைக் கொண்டுள்ளது. இந்த போன், ஃபன் டச் ஓஎஸ் 10 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்குகிறது. இது 6.44-இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன், 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு, 2.26GHz எக்ஸினோஸ் 980 ஆக்டா கோர் பிராசசரால் இயக்கப்படுகிறது. 256 ஜிபி வரை இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.

போனின் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் ஷூட்டர், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். போனின் கேமரா அம்சங்களில் 4K video shooting, night scene, portrait, panorama, dynamic photo, AR cute shoot, short video, professional mode, slow motion மற்றும் time-lapse photography ஆகியவை அடங்கும். போனின் முன்புறத்தில், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

இந்த போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் ஒரு பெரிய 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. மற்ற போன்களில் உள்ளது போன்ற அதே இணைப்பு விருப்பங்கள் உள்ளன. டிஸ்பிளேவுக்கு அடியில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளது. இந்த போனில் வெப்பத்தை 10 சதவீதம் வரை குறைக்க கூல் டர்போ உள்ளது. இந்த போன் 161.16x74.66x8.68 மிமீ அளவு மற்றும் 181 கிராம் எடை கொண்டதாகும்.

 
KEY SPECS
Display 6.44-inch
Processor Samsung Exynos 980
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo S6, Vivo S6 Launch, Vivo S6 Price, Vivo S6 Specifications, Vivo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus 15 மற்றும் OnePlus 13s-க்கு OxygenOS 16 அப்டேட்: மார்ச் 2026 பாதுகாப்பு புதுப்பிப்பு
  2. Poco X8 Pro Series இந்திய விலை லீக்; அறிமுகத்திற்கு முன் விவரங்கள் வெளியீடு
  3. iQOO Z11 Geekbench-ல் வந்தது; MediaTek Dimensity 8500 செயலியுடன் சீனாவில் விரைவில் அறிமுகம்
  4. Instagram DM-களில் End-to-End Encryption நீக்கம்: இது என்ன என உங்களுக்கு தெரியுமா?
  5. AirPods Max 2 இந்தியாவில் அறிமுகம் – H2 சிப், Adaptive Audio, 20 மணி நேர பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள்
  6. OnePlus Nord 6 Series இந்திய அறிமுகம் டீஸ்; OnePlus Nord CE 6 BIS தரவுத்தளத்தில் கிடைக்கும்
  7. Realme P4 Lite 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; வடிவமைப்பு மற்றும் பேட்டரி விவரங்கள் வெளியீடு
  8. iQOO Z11x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 7,200mAh பேட்டரி, 50MP கேமரா
  9. MacBook Neo-க்கு டச் ஸ்கிரீன் அப்கிரேடு வர வாய்ப்பு குறைவு; Mark Gurman தகவல்
  10. Microsoft-ன் Gaming Copilot AI உதவியாளர் 2026-ல் Xbox Series X, Xbox Series S கன்சோல்களில் வரும்: வெளியான தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.