பலதரப்ட்ட தகவல் கசிவுகளுக்கு பிறகும் இந்த போனுக்காக பலரும் காத்திருந்த நிலையில் ஒருவழியாக விவோ ஐகியூ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
விவோவின் துணை பிராண்டான இந்த ஐகியூவின் கீழே அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுதான். மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் சோனி IMX363 பிராசஸ்சருடன் வெளியான இந்த ஸ்மார்ட்போன் மொபைல் கேமராக்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தயாரிப்பு ஸ்னாப்டிராகன் 855 SoC தொழிநுட்பத்தால் பவரூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விவோ ஐகியூ விலை பட்டியல்
சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த விவோ ஐகியூ மாடல் சுமார் நான்கு வகைகளாக அறிமுகமாகியுள்ளது. 6ஜிபி ரேம்/128 ஜிபி சேமிப்பு வசதி உடைய மாடல் சுமார் 31,700 ரூபாய்க்கும், 8 ஜிபி ரேம்/128 ஜிபி சேமிப்பு வசதி உடைய மாடல் 34,900 ரூபாய்க்கும், 8 ஜிபி ரேம்/256 ஜிபி சேமிப்பு வசதி உடைய மாடல் 38,100 ரூபாய்க்கும் இந்தியாவில் வெளியாகலாம் என எதிர்பார்கப்படுகிறது.
இதே மாடலில் சுமார் 128 ஜிபி ரேம் மற்றும் 256 சேமிப்பு வசதி பெற்ற மாடல் அதிகப்படியாக ரூ. 45,500- க்கு இந்தியாவில் வெளியாகலாம்.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் எலக்ட்ரிக் புளூ மற்று லாவா ஆரஞ்சு ஆகிய நிறங்களில் அறிமுகமாகியுள்ளது. சீனாவில் வரும் மார்ச் மாதம் 6 தேதி ஃபிளாஷ் சேலில் மூலம் இந்த போன் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
விவோ ஐகியூ ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்:
கேமராக்களுக்கு உதவும் வகையில் 4 இடங்ளில் பயனளிக்கும் பட்டன்கள் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் விவோ இந்த போன் பிராண்டில் புதிய கூலிங் தொழிநுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழிநுட்பத்தால் போனின் செயல்பாட்டை குறைக்காமல் வெப்பநிலையை குறைக்க முடிகிறது.
மேலும் இந்த போனில் நான்கு மோட்கள் உள்ளதால் கேமராக்களுக்கும் சாதாரண போன்களுக்கும் மாற்ற முடிகிறது.
ஆண்டுராய்டு 9.0 பைய் மென்பொருளில் இயங்குகிறது. 6.42 இஞ்ச் அமோலெட் திரை மற்றும் வாட்டர் டிராப் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஆக்டாகோர் பிராசஸ்சரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 885SoC உடன் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விவோ ஐகியூ ஸ்மார்ட்போனில் 6,8 மற்றும் 12 ஜிபி ரேம் வசதிகள் உள்ளது. மூன்று பின்புற கேமராக்கள் இந்த ஸ்மார்ட்போனில் இருப்பதால் 13 மெகா பிக்சல், 12 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் பின்புற கேமராக்கள் உள்ளன. அதுபோல் செல்ஃபி வசதிக்காக 12 மெகா பிக்சல் முன்புற கேமராவும் அமைந்துள்ளது.
விவோ ஐகியூ ஸ்மார்ட்போனில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியுண்டு. இது போனின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதர வசதிகளாக டைப் சி போர்ட், இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் மற்றும் 4,000mAh பேட்டரி வசதியும் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்