சாம்சங் இந்தியாவில் Galaxy S10 Lite-க்கான புதிய அப்டேட்டை வெளியிடத் தொடங்கியுள்ளது, இது ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்சை மேம்படுத்துகிறது மற்றும் 60fps-ல் 4K வீடியோ ரெக்கார்டிங், 4K ரெசல்யூஷனில் சூப்பர் ஸ்டெடி மோட், படத்தின் தரம் மற்றும் பிற பொது நிலைத்தன்மை, பிழை திருத்தங்கள் மற்றும் புதிய கேமரா அம்சங்களை சேர்க்கிறது. இந்த அப்டேட் சுமார் 416.22MB அளவு கொண்டதாகும்.
டைசென்ஹெல்ப் (Tizenhelp) அறிவித்தபடி, மென்பொருள் அப்டேட், தற்போதுள்ள ஜனவரி 2020 பாதுகாப்பு இணைப்பை பிப்ரவரி வரை புதுப்பிக்கிறது. புதிய கேமரா அம்சங்கள் முக்கியமாக பின்புற, முதன்மை கேமராவை இலக்காகக் கொண்டுள்ளன. அப்டேட்டுக்கு பிறகு, நீங்கள் இப்போது 4K (3,840x2,160 பிக்சல்கள்) தெளிவிதிறன் மற்றும் 60fps-ல் பதிவு செய்ய முடியும். தற்போதைய சூப்பர் ஸ்டெடி ஷூட்டிங் மோட் 1080p ரெசல்யூஷனில் வைட்-ஆங்கிள் கேமரா மூலம் படப்பிடிப்புக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்டேட்டுக்கு பிறகு, நீங்கள் 4K தெளிவுதிறன் வரை பதிவு செய்ய முடியும். இது படங்களின் தரத்தையும் கேமரா செயலியின் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்தியுள்ளதாக சாம்சங் கூறுகிறது.
கேமரா தவிர, புதிய அப்டேட் கைரேகை அங்கீகாரத்தில் மேம்பாடுகளைச் சேர்க்கும் மற்றும் பிற செயல்பாடுகளின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.
Samsung Galaxy S10 Lite, Galaxy Note 10 Lite உடன், நிறுவனத்தின் இடைப்பட்ட சலுகைகள் மற்றும் OnePlus சாதனங்களின் சந்தைப் பங்கைக் கைப்பற்றும் முயற்சியாகும். Galaxy S10 Lite குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 SoC-ஐ கொண்டுள்ளது, மேலும் இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரு வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது, இதன் விலை ரூ.39.990 ஆகும். Samsung Galaxy S10 Lite குறித்த எங்கள் முழு மதிப்பாய்வையும் இங்கே (right here) படிக்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்