டிரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறதா Samsung Galaxy S10 Lite...?!

டிரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறதா Samsung Galaxy S10 Lite...?!

Photo Credit: Sammobile

Samsung Galaxy S10 Lite, CES 2020-ல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • S10 Lite அனைத்து பொத்தான்களையும் வலது விளிம்பில் இருப்பதை காணலாம்
  • இந்த போன் 48 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமராவைக் கொண்டிருக்கும்
  • S10 Lite, 4,500mAh பேட்டரியை பேக் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
விளம்பரம்

Samsung Galaxy S10 Lite பயனர் கையேடு ஆன்லைனில் கசிந்துள்ளது. Samsung Galaxy S10-ல் காணப்பட்டதைப் போலவே இந்த போனின் முன்புறத்தில் hole-punch டிஸ்ப்ளே இருப்பதைக் காணலாம். பின்புறத்தில், மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது செங்குத்தாக சீரமைக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. Galaxy S10 Lite எப்போது வெளியிடப்படும் என்பதில் எந்த வார்த்தையும் இல்லை.

Sammobile-ல் உள்ளவர்கள் Galaxy S10 Lite பயனர் கையேட்டைப் பிடித்துக் கொண்டனர். மேலும், இந்த Galaxy S10 Lite ஸ்கெட்ச் வடிவமைப்பை இரு முனைகளிலிருந்தும் காட்டுகிறது. குறிப்பிட்டுள்ளபடி, போனின் மையத்தில் வைக்கப்பட்டுள்ள செல்பி கேமராவிற்கான கட்-அவுட் உடன் Galaxy S10 போன்ற முன்பகுதி உள்ளது. பின்புறத்தில் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள டிரிபிள் கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் பிரதான சென்சார், 12 மெகாபிக்சல் ultra-wide சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் macro கேமராவைக் கொண்டுள்ளது. பவர் பொத்தான்கள் மற்றும் வால்யூம் ராக்கர்கள் திரையின் வலது விளிம்பில் நிலைநிறுத்தப்படும் என்பதையும் பயனர் கையேடு ஸ்கெட்ச் காட்டுகிறது.

இந்த போனில் 6.7-inch full-HD+ டிஸ்ப்ளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 855 SoC-யால் இயக்கப்படும், 8 ஜிபி ரேம் பேக் செய்வதோடு 128 ஜிபி ஸ்டோரேஜை வழங்கும். இது 4,500mAh பேட்டரியையும் பேக் செய்யும் என்று நம்பப்படுகிறது. Galaxy Note 10 Lite 32 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வர வாய்ப்புள்ளது.

இந்த போனின் விலை EUR 679.99 (சுமார் ரூ. 53,700) என்றும், கருப்பு, வெள்ளை மற்றும் நீல கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது Galaxy Note 10 Lite உடன் இணைந்து CES 2020-ல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy S10 Lite Specifications Leak Tips Snapdragon 855, tOIS Tech

Samsung Galaxy S10 Lite Briefly Sighted on Company Website, Launch Expected Soon: Report

Samsung Galaxy S10 Lite, Galaxy Note 10 Lite Renders Leak Yet Again, Showing Their Central Hole-Punch Design

Samsung Galaxy S10 Lite Spotted on US FCC With 45W Charging, Tipped to Launch in India Next Month

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »