3 பின்புற கேமரா அமைப்புடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்ட சாம்சங் கேலக்சி M30s ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதத்தின் நடுவில் அறிமுகமாகலாம் என்று IANS தகவல் தெரிவித்துள்ளது. அப்படி அறிமுகமாகும் பட்சத்தில் சாம்சங் கேலக்சி M தொடரில், ஐந்தாவது ஸ்மார்ட்போனாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும். மேலும், இந்த புதிய் சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த க்என தகவல் வெளியாகியுள்ளது. மற்ற M தொடர் ஸ்மார்ட்போன்களில் இந்த ப்ராசஸர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை IANS கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
சாம்சங் கேலக்சி M30s ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமரா அமைப்புடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கும் என்று IANS தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான சியோமி, ரியல்மீ ஆகியவற்றின் சமீபத்திய ஸ்மார்ட்போன்கள் ரெட்மி K20 Pro, Mi A3, ரியல்மீ 5 Pro ஆகியவை இதே போன்ற 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் , 3 பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
இந்த சாம்சங் கேலக்சி M30s ஸ்மார்ட்போனின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக இந்த ஸ்மார்ட்போனின் புதிய பேட்டரி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"தொழில்துறையில் முன்னணி பேட்டரி திறனை இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. கேலக்சி M30s வேகமான சார்ஜ் திறனை கொண்டிருக்கும்" என்று IANS வட்டாரங்கள் தெரிவித்தன. சாம்சங்கின் பிரத்யேக ஆன்லைன் ஸ்மார்ட்போன்களான கேலக்சி M தொடர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது மேலும், இந்த ஸ்மார்ட்போன்கள் இடைப்பட்ட விலை பிரிவில் சிறந்த ஸ்மார்ட்போன்களாக பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி M30s பண்டிகை காலங்களில் சாம்சங்கின் முக்கிய ஆன்லைன் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகலாம். சாம்சங் இதுவரை கேலக்சி M10, கேலக்சி M20, கேலக்சி M30 மற்றும் கேலக்சி M40 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நான்கு ஸ்மார்ட்போன்களும் அமேசான் மற்றும் சாம்சங்.காம் தளங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில், சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையின் முன்னனி நிறுவனமாக இருக்கும் சியோமியுடனான இடைவெளியை குறைப்பதற்காக கேலக்சி A மற்றும் M தொடர்களுடன் வலுவான புதுப்பிப்பை ஏற்படுத்தி வருகிறது.
"இந்தியா ஸ்மார்ட்போன் சந்தை பெரிய அளவில் மலிவு ஸ்மார்ட்போன்களால் (ரூ. 7,000 - ரூ. / 25,000) இயங்குகிறது."சைபர் மீடியா ரிசர்ச் (CMR) தலைமை-தொழில்துறை புலனாய்வுக் குழு (IIG) ஆகியவற்றின் பிரபு ராம் கூறினார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்