128 ஸ்டோரேஜுடன் வருகிறது Samsung Galaxy M21!

128 ஸ்டோரேஜுடன் வருகிறது Samsung Galaxy M21!

Samsung Galaxy M21 இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • Galaxy M11 நீலம், கருப்பு, ஊதா வண்ணங்களில் வரும்
  • Galaxy M21 Exynos 9610 அல்லது Exynos 9611 SoC-யால் இயக்கப்படுகிறது
  • Galaxy M31 நீலம், கருப்பு & சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் வரும்
விளம்பரம்

Samsung Galaxy M-சீரிஸ் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் புதிய தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து  போன்களும் இந்த ஆண்டு அதன் அடுத்த மாடல்களை பார்க்க வாய்ப்புள்ளது. Samsung Galaxy M20-யின் தொடர்ச்சியாக, Samsung Galaxy M21 பற்றிய விவரங்களை ஒரு புதிய அறிக்கை கொண்டு வருகிறது. இந்த போன் அதிக ஸ்டோரேஜுடன் வருவதாகவும், ஆண்ட்ராய்டு 10-ல் இயங்குவதாகவும், குறைந்தது மூன்று பின்புற கேமரா அமைப்பை உள்ளடக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Samsung Galaxy M11 மற்றும் Samsung Galaxy M31 போன்ற பிற போன்களின் கலர் ஆப்ஷன்களையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


Samsung Galaxy M21 விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை)

சாம்மொபைலின் அறிக்கையின்படி, Samsung Galaxy M21 மாடல் எண் SM-M215F உடன் அறிமுகமாகும். வரவிருக்கும் போனானது 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வரும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. Samsung Galaxy M21, ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும். இது, Exynos 9610 அல்லது Exynos 9611 SoC-யால் இயக்கப்படுகிறது. குறிப்பிட்டுள்ளபடி, இந்த போன் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும், Galaxy M21 நீல, கருப்பு மற்றும் பச்சை கலர் ஆப்ஷன்களில் வரும்.

லோயர் எண்ட் Samsung Galaxy M11 நீலம், கருப்பு மற்றும் வயலட் கலர் ஆப்ஷன்களில் வரும் என்றும், அதிக பிரீமியம் Samsung Galaxy M31 நீல, கருப்பு மற்றும் சிவப்பு கலர் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அறிக்கை கூறுகிறது. முந்தைய கசிவுகள் Samsung Galaxy M11, 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்யும் என்று பரிந்துரைத்தது. Samsung Galaxy M31, 64 ஜிபி வேகத்தில் இருக்கும். Samsung Galaxy M31, ஸ்னாப்டிராகன் 665 SoC-யால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மூன்று பின்புற கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது.

Samsung Galaxy M11, Galaxy M31 Reportedly in Early Stages of Development, Tipped to Launch Next Year

Samsung Galaxy M21, Galaxy M31, Galaxy M41 Key Specifications Surface, Expected to Debut in 2020

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »