சாம்சங் இரண்டு புதிய போன்களை குறைந்த விலையில் கொண்டு வருகிறது!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 29 மே 2020 11:58 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங் கேலக்ஸி எம் 11 விலை ரூ.10,999 ஆகும்
  • கேலக்ஸி எம் 01, 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும்
  • சாம்சங் கேலக்ஸி எம் 01, இரட்டை பின்புற கேமராக்களுடன் வரும்

சாம்சங் கேலக்ஸி எம் 01 ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Photo Credit: AndroidPure

சாம்சங் கேலக்ஸி எம் 01 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 11 ஆகியவை பட்ஜெட் பிரிவில் சந்தைக்கு வருகின்றன. இந்த போன் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படலாம். இந்த இரண்டு போன்களின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு கசிந்தன. சாம்சங் கேலக்ஸி எம் 11 மார்ச் மாதம் வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, அந்த போனின் விவரங்கள் ஏற்கனவே அறியப்பட்டுள்ளது. இந்த முறை சாம்சங் கேலக்ஸி எம் 01-ன் விவரக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


சாம்சங் கேலக்ஸி எம் 01 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 11 விலை:

சாம்சங் கேலக்ஸி எம் 01-ன் விலை ரூ.8,999-ல் தொடங்குகிறது. அடிப்படை வேரியண்டில் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும். மறுபுறம், சாம்சங் கேலக்ஸி எம் 11-ன் விலை ரூ.10,999-ல் தொடங்கலாம். இந்த போனின் அடிப்படை வேரியண்டிலும் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும்.


சாம்சங் கேலக்ஸி M01 விவரங்கள்:

Samsung Galaxy M01, 5.71 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த போனில் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் இருக்கும். 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும். 

தொலைபேசியின் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் மற்றும் பின்புறத்தில் ஒரு கேமரா இருக்கும். 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த போனில் 5W சார்ஜிங் இருக்கும்.


சாம்சங் கேலக்ஸி எம் 11 விவரங்கள்:

டூயல்-சிம் Samsung Galaxy M11, 6.4 இன்ச் எச்டி + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் இருக்கலாம். அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் சாம்சங் சிப்செட்டை பெயரிடவில்லை. இந்த போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும்.

கேலக்ஸி எம் 11 பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 13 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. மேலும், 5 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. இந்த போனில் செல்பி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி, வைஃபை 802.11, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பீடோ மற்றும் கலிலியோ உள்ளன. போனின் உள்ளே 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.


Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பிரபலமான 'சோரா' AI வீடியோ செயலியை மூடுகிறது ஓபன்ஏஐ; டிஸ்னியுடனான மெகா ஒப்பந்தமும் முறிவதாகத் தகவல்
  2. தாய்லாந்தின் NBTC சான்றிதழ் தளத்தில் சியோமி 17T ப்ரோ: விரைவில் சர்வதேச அளவில் அறிமுகம்
  3. முழுத்திரை வசதி கொண்ட ஐபோன் 20 இல்லையா? ஆப்பிளின் 20-வது ஆண்டு மாடலில் அதன் மிக முக்கிய அம்சம் ஏன் இடம் பெறாமல் போகலாம்?
  4. ஐபோன்களுக்கான iOS 26.4 அப்டேட்: ஆப்பிள் மியூசிக்கில் AI மூலம் உருவாக்கப்பட்ட பிளேலிஸ்ட்கள் மற்றும் 8 புதிய எமோஜிகள்
  5. சாம்சங் கேலக்ஸி S27 அல்ட்ராவில் டிஜிடைசருடன் கூடிய 'S Pen' ஆதரவு தொடர்ந்து இடம்பெறும்
  6. இந்தியாவில் வெளியாகும் முன்பாக ரியல்மி 16 5G பேட்டரி திறன், நிறங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் வெளியீடு
  7. BSNLல் CNAP வசதி தொடக்கம்; நாடு தழுவிய 'காலர் ஐடி' சேவை விரைவில் எதிர்பார்ப்பு
  8. 7,500mAh பேட்டரி, இரட்டை 50-மெகாபிக்சல் கேமராக்களுடன் ஒன்பிளஸ் 15T அறிமுகமானது: விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ
  9. Apple Maps Ads Coming Soon to iPhone and Other Devices: Apple's New Plan
  10. ஜூன் 8-ல் ஆப்பிளின் WWDC 2026 தொடக்கம்: AI மற்றும் மென்பொருள் மேம்பாடுகள் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.