சாம்சங் கேலக்ஸி M51 குறித்த விவரங்கள் லீக்! என்ன சிறப்பம்சங்கள்?

சாம்சங் கேலக்ஸி M51 குறித்த விவரங்கள் லீக்! என்ன சிறப்பம்சங்கள்?

Photo Credit: OnLeaks/ Pigtou

இந்த ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை

ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy M51 may be launched soon
  • It is said to be powered by the Snapdragon 730 SoC
  • Latest Samsung Galaxy M51 leaks contradict older rumours
விளம்பரம்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M51 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் கசிந்துள்ளன.

சாம்சங் நிறுவனம் புத்தம் புதிய கேலக்ஸி M51 என்ற ஸ்மார்ட்போனை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், இதில் 6.67 அளவுள்ள அமோலேட் டிஸ்பிளே இருக்கலாம் என்றும், ஸ்நாப்டிராகன் 730 SoC பிராசசர் இருக்கலாம் என்றும் தகவல்கள் வந்துள்ளன. 

இது தொடர்பாக தொழில்நுட்ப பிரியர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சில விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, சாம்சங் M51 ஸ்மார்ட்போன் மார்ச் மாதமே அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டதாகவும், ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக சரியான நேரத்தில் உற்பத்தி பணிகளை செய்ய முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது. 
 

சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் திரை, அமோலேட் டிஸ்பிளே, ஸ்நாப்டிராகன் 730 SoC உள்ளது. இந்த தகவல் மட்டும் தான் வெளிவந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வழக்கமாக எம் சீரிஸில் எக்ஸினோஸ் பிராசசர் தான் இருக்கும். இம்முறை எக்ஸினோஸ்க்குப் பதிலாக ஸ்னாப்டிராகன் பிராசசர் இருப்பதாக கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி M51 இல் எதிர்பார்க்கப்படும் பிற சிறப்பம்சங்கள்:

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.67 இன்ச்
டிஸ்பிளே: அமோலேட்
பிராசசர்: ஸ்நாப்டிராகன் 730 SoC
ரேம்: 8ஜிபி 
கேமரா: பின்பக்கத்தில் ட்ரிப்பிள் கேமரா. 
பிரைமரி கேமார: 64MP, செகண்டரி கேமரா:  12MP அல்ட்ரா வைட் லென்ஸ், 
பேட்டரி சக்தி:  7,000 mAh 

இந்த ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.


Should the government explain why Chinese apps were banned? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung, Samsung Galaxy M51, Samsung Galaxy M51 Specifications
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »