Photo Credit: Weibo
சாம்சங் நிறுவனம், கேலக்ஸி A60 மற்றும் கேலக்ஸி A40 ஸ்மார்ட் போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி A60-யில் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே பேனலுடன் பன்ச் ஹோல் டிசைன் உள்ளது. அதே நேரத்தில் கேலக்ஸி A40, இன்ஃபினிட்டி யூ- டிஸ்ப்ளே பேனலுடன் வந்துள்ளது. இரண்டு போன்களும் பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A60 மற்றும் கேலக்ஸி A40 விலை:
சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேலக்ஸி A60, இந்திய விலைப்படி சுமார் ரூ.20,700 என்ற நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி வகைக்கான விலை. அதேநேரத்தில் கேலக்ஸி A40-யின் விலை, சுமார் 15,600 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி வெர்ஷனின் விலையாகும். எப்போது இந்த போன் சந்தையில் விற்பனைக்கு வரும் என்பது தெரியவில்லை. அதேபோல, எப்போது இந்த இரண்டு போன்களும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் என்பதும் மர்மமாகவே உள்ளது. சீக்கிரமே இது குறித்து சாம்சங் அறிவிப்பு வெளியிடலாம். சாம்சங் கேலக்ஸி A80, வரும் மே மாதம் இந்தியாவில் 45,000 மூதல் 50,000 ரூபாய்க்குள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட உள்ளது.
சாம்சங் கேலக்ஸி A60 மற்றும் கேலக்ஸி A40 சிறப்பம்சங்கள்:
சாம்சங் கேலக்ஸி A60-யில் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே பேனலுடன் பன்ச் ஹோல் டிசைன் உள்ளது. அதன் ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ 91.8 சதவிகிதம் ஆகும். ஸ்னாப்டிராகன் 675 எஸ்ஓசி-யால் பவரூட்டப்பட்டுள்ள இந்த போனில் 6ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. 64 ஜிபி அல்லது 128 ஜிபி சேமிப்பு வசதி ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.
கேலக்ஸி A60, கேமரா பிரிவைப் பொறுத்தவரை, பின்புறம் மூன்று கேமரா வசதிகளுடன் வருகிறது. 32, 8 மற்றும் 5 மெகா பிக்சல் திறன் கொண்ட கேமராக்கள் பின்புறம் அமைந்துள்ளன. 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
போனின் பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. 4,500 எம்.ஏ.எச் பவர் கொண்ட பேட்டரியுடன் வரும் கேலக்ஸி A60, 25w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைப் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் கேலக்ஸி A40, இன்ஃபினிட்டி யூ- டிஸ்ப்ளே பேனலுடன் வந்துள்ளது. எக்சினோல் 7904 எஸ்.ஓ.சி மூலம் போன் பவரூட்டப்பட்டுள்ளது. 13 மற்றும் 5 மெகா பிக்சல் வைட் ஆங்கில் கேமரா மற்றும் 5 மெகா பிக்சல் டெரிடரி சென்சார்களை பின்புறத்தில் இந்த போன் கொண்டுள்ளது. குறிப்பாக 5,000 எம்.ஏ.எச் பவர் கொண்ட பேட்டரியுடன் வரும் கேலக்ஸி A40, 15w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைப் பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்