மாஸ்சா வந்துட்டான் Samsung Galaxy S24 FE! இனி எல்லாமே மெர்சல்

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 19 ஜூன் 2024 17:48 IST
ஹைலைட்ஸ்
  • 6.65 இன்ச் டிஸ்பிளே, மூன்று முன்பக்க கேமரா
  • Snapdragon 8 Gen 3 மைக்ரோ சிப்புடன் வருகிறது
  • கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் செய்ய செய்ய செம்ம மாஸ்சாக இருக்கும்.

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே அதிரும்படி Samsung Galaxy S24 FE சீரியஸ் போன்களின் ப்ரீ-புக்கிங் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விற்பனையில் சக்கைபோடு போட்ட சாம்சங் கேலக்ஸி மாடலின் S24 FE எடிசன் விரைவில் வெளியாக இருக்கிறது. பல எதிர்பாராத அம்சங்கள் Samsung Galaxy S24 FE மாடலில் இருக்கிறது. FE என்றால் Fan Editition  என்று சொல்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 6.65 இன்ச் டிஸ்பிளேவுடன்  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் செய்ய செய்ய செம்ம மாஸ்சாக இருக்கும்.

இந்தியாவில் Samsung Galaxy S24 FE மாடல் ரூபாய் 59,999க்கு அறிமுகம் ஆகும் என தெரிகிறது. 8 ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.65 இன்ச் அளவிலான அமோஎல்இடி டிஸ்பிளே இருக்கலாம். பவர்புலான Snapdragon 8 Gen 3 சிப்செட் இருப்பதால் கேமிங், வீடியோ எடிட்டிங் என அனைத்து பயன்பாட்டுக்கும் உதவிகரமாக இருக்கும். 

இதுதவிர, Samsung Galaxy S24 FE  வேரியண்ட் Exynos 2400 SoC சிப் மூலம் இயங்கும் என தெரிகிறது. இதனால் வேகம் பக்காவாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி S23 FE மாடலில் உள்ளதை போலவே 4500 எம்ஏஎச் பேட்டரி இருக்கலாம் என தெரிகிறது. இது ஒருநாள் முழுக்க தாக்குபிடிக்க உதவும். கேமராக்கள் வடிவமைப்பு மற்றும் கலர் ஆப்ஷன்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

கூடுதலாக டிரிபிள் ரியர் கேமரா யூனிட், அதில் OIS எனப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.  50 மெகாபிக்சல் மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ராவைடு ஷூட்டர், 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, முன்பக்கத்தில் 10 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் உள்ளது.

வெளிப்புற பட்டன்களை பொறுத்தவரையில் வழக்கம் போல வலது பக்கம் வால்யூம் பட்டன்கள் மற்றும் பவர் கீ இருக்கிறது. அதே சமயம் கீழ் பேனலில் USB Type C போர்ட் மற்றும் சிம் ட்ரே ஸ்லாட் இருப்பது போல் தெரிகிறது. இடது பக்கம் எந்த டிசைனும் இருப்பது போல தெரியவில்லை. ஆகமொத்தத்தில் செல்போன் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய இந்த Samsung Galaxy S24 FE விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung Galaxy S24 FE
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Tecno Spark Go 5G: ₹10,000-க்குள்ள இந்தியாவுலயே ஸ்லிம்மான 5G போன்! ஆகஸ்ட் 14-ல் வெளியீடு!
  2. Panasonic-ன் புது மிரட்டல் டிவி! MiniLED தொழில்நுட்பம், Dolby Atmos-உடன் வெளியீடு!
  3. Samsung Galaxy A17 5G: ₹17,500-க்கு ஒரு பெரிய பேட்டரி போன்! பட்ஜெட் மார்க்கெட்டில் ஒரு புதிய அஸ்திரம்!
  4. Lava-வின் புதிய அஸ்திரம்! Blaze AMOLED 2 5G லான்ச் தேதி உறுதி! AMOLED டிஸ்ப்ளே உடன் அதிரடி!
  5. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  6. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  7. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  8. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
  9. Motorola G86 Power 5G: ஒருமுறை சார்ஜ் போட்டா மூணு நாள் வரும்! அம்சங்கள் கேட்டா அசந்து போவீங்க!
  10. கேமர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Acer Nitro Lite 16 லேப்டாப் வந்தாச்சு! விலை கேட்டா ஷாக் ஆவீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.