இந்தியாவில் கேலக்ஸி எஸ் 20-சீரிஸ் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் புதிய சலுகையை வழங்குகிறது. கேலக்ஸி எஸ் 20-சீரிஸ் போன்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,000 மதிப்புள்ள இ-வவுச்சர்களை வழங்குவதாக சாம்சங் அறிவித்துள்ளது. ஆனால், மே 3 வரை அந்த போனை வாங்க முடியவில்லை. இந்த சலுகையின் மூலம் வாடிக்கையாளர்களின் முன்பதிவுகளை வாங்குதல்களாக மாற்ற சாம்சங் முயற்சிக்கிறது.
கொரோனோவைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த மாதம், முன்பதிவு சலுகை காலக்கெடுவை ஏப்ரல் 30 முதல் மே 20 வரை நிறுவனம் நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.
Samsung தனது புதிய சலுகை குறித்து, Galaxy S20, Galaxy S20+ மற்றும் Galaxy S20 Ultra போன்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,000 மதிப்புள்ள இ-வவுச்சர்களுக்கு உரிமை கிடைக்கும் என்று கூறியுள்ளது. மே 4 முதல் மே 20 வரை வாடிக்கையாளர்கள் தங்கள் போனை செயல்படுத்தும்போது மட்டுமே இந்த வவுச்சர் கிடைக்கும். சாம்சங்.காம் இ-ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த கேலக்ஸி தயாரிப்புகளையும் வாங்க அவர்கள் தங்கள் இ-வவுச்சர்களைப் பயன்படுத்தலாம்.
தங்கள் போன்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் பல சலுகைகளையும் வழங்கியுள்ளது. ஜூன் 15-க்குள் வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகளை செயல்படுத்த வேண்டும். சாம்சங் வாடிக்கையாளர்களுக்கான பரிமாற்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் கேலக்ஸி எஸ் 20-சீரிஸ் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய சாதனத்தை பரிமாறிக்கொள்ளலாம் மற்றும் கூடுதல் போனஸ் ரூ.5,000 பெறலாம்.
இது தவிர, எச்.டி.எஃப்.சி வங்கியின் கிரெடிட் / டெபிட் கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் போனை வாங்கினால், அவர்கள் ரூ.6,000 கேஷ்பேக் பெறலாம். பரிமாற்ற போனஸ் அல்லது வங்கி தள்ளுபடி சலுகைகளில் ஒன்றை வாடிக்கையாளர் பெறலாம். இந்த இரண்டு சலுகைகளும் ஒரே நேரத்தில் பொருந்தாது.
கேலக்ஸி எஸ் 20 + மற்றும் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ராவை முன்பதிவு செய்பவர்களுக்கு கேலக்ஸி பட்ஸ் +ஐ வெறும் ரூ.1,999-க்கு வாங்க வாய்ப்பு கிடைக்கும் என்று சாம்சங் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், கேலக்ஸி எஸ் 20 வாங்குபவர்களுக்கு கேலக்ஸி பட்ஸ் + ரூ.2,999-க்கு வாங்க வாய்ப்பு கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி பட்ஸ் +ஐ ரூ.11,999-க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தவிர, கேலக்ஸி எஸ் 20 சீரிஸ் போன்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் சாம்சங் கேர் + (ரூ.3,999 விலை)-யில் இருந்து ரூ.1,999-க்கு பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது.
முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவற்றிலிருந்து இரட்டை டேட்டா சலுகையும், நான்கு மாத யூடியூப் பிரீமியம் சந்தாவும் கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மார்ச் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ராவின் விலை ரூ.97,900-யில் இருந்து தொடங்குகிறது. அதே நேரத்தில், கேலக்ஸி எஸ் 20 + மற்றும் கேலக்ஸி எஸ் 20 ஆகியவற்றின் விலை முறையே ரூ.77,900 மற்றும் ரூ.70,500-யில் இருந்து தொடங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்