இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் ஃபோனில் ஐரிஸ் (கருவிழி) ஸ்கேனிங் வசதியை அறிமுகப்படுத்திய சாம்சங் நிறுவனம், தற்பொழுது கேலக்ஸி S10 ஸ்மார்ட் ஃபோனில் ஐரிஸ் ஸ்கேனிங்கைத் தவிர்த்துள்ளது.
விரைவில் சந்தையில் வெளிவரவிருக்கும் ‘கேலக்ஸி S10’ ஸ்மார்ட் ஃபோனிற்கான தயாரிப்பில் முழுவீச்சில் இருக்கும் ‘சாம்சங்’ நிறுவனத்திற்கு, முந்தைய கேலக்ஸி சாதனங்களில் உள்ள ஐரிஸ் ஸ்கேனிங்கை இதில் சேர்க்கும் திட்டம் இல்லையென்று தெரிவித்துள்ளது தென் கொரியாவை சேர்ந்த ‘தி பெல்’ பத்திரிக்கை.
‘கேலக்ஸி S10’ ஸ்மார்ட் ஃபோனில் கைரேகையை வைத்து அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை ஒரு மாற்று அடையாள முறையாக சேர்த்து, மேலும் கூடுதலாக ஆப்பிள் ஃபேஸ் ஐடியைப் போலவே ஒரு 3D ஃபேஸ் ஸ்கேனிங் தொழில்நுட்பத்தையும் சேர்த்துள்ளது சாம்சங். சமீபத்தில் Xiaomi மற்றும் Oppo உள்ளிட்ட பல ஸ்மார்ட் ஃபோன்கள், இந்த தொழில்நுட்பத்தின் தங்களது சொந்த வெர்ஷன்களை உருவாக்கியுள்ளனர். சாம்சங் தனது சொந்த 3D ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை உருவாக்க இஸ்ரேலிய நிறுவனம் Mantis விஷனுடன் கைகோர்த்திருக்கிறது. ஒரு வேளை, ‘3D ஃபேஸ் ஸ்கேனிங்’ மற்றும் ‘கைரேகை அடையாளம்’ உள்ளிட்ட இந்த இரண்டு தொழில்நுட்பங்களும் சாம்சங் நிறுவனத்திற்கு பலன் தராவிட்டால், ஐரிஸ் ஸ்கேனிங்கை சாம்சங் மீண்டும் தக்க வைத்துக் கொள்ளக்கூடும்.
சாம்சங் கேலக்ஸி S10இன் டிஸ்ப்ளே 5.8 இன்ச் அளவு இருக்கும் என்றும், கேலக்ஸி S10+ டிஸ்ப்ளே 6.3 இன்ச் அளவு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஐரிஸ் ஸ்கேனிங் அம்சத்தை நீக்குவதன் மூலம் சாம்சங் ஸ்மார்ட் ஃபோனின் எடை குறைவது மட்டுமில்லாமல் தயாரிப்பு செலவும் குறையும் என சொல்லப்படுகிறது.
கேலக்ஸி நோட் 9இல் கைரேகை அடையாள தொழில்நுட்பத்தை சேர்க்க இயலாததால், ஐரிஸ் ஸ்கேனர் வசதி இருப்பதாக தெரிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்