Samsung-ன் அடுத்த படைப்பான Galaxy S10 Lite வெளியானது. போனை பற்றிய விலை, விவரங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளே.
தென் கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் Galaxy S10 Lite-ன் விலையை இன்னும் வெளியிடவில்லை. ஆனால், ஜனவரி 7-ஆம் தேதி CES 2020 அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் அல்லது அடுத்தடுத்த நாட்களில் ஒரு அறிவிப்பை எதிர்பார்க்கலாம். Galaxy S10 Lite இரண்டு வேரியண்டுகளில் வரும் – 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆகும். இந்த போன் Prism White, Prism Black மற்றும் Prism Blue கலர் ஆப்ஷன்களில் வரும்.
Samsung Galaxy S10 Lite, pixel density of 394ppi உடன் 6.7-inch Full HD+ (1080 x 2400 pixels) Infinity-O Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 64-bit 7nm octa-core processor-ல் இருந்து சக்தியை ஈர்க்கிறது. இந்த போனை Exynos SoC அல்லது Qualcomm chipset இயக்குமா என்பதை Samsung குறிப்பிடவில்லை. இந்த சாம்சங் போன், 8GB RAM வரை பேக் செய்கிறது. ஆனால், அதன் லோயர்-எண்ட் வேரியண்டான 6GB RAM-மும் பட்டியலில் உள்ளது.
Samsung Galaxy S10-ன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில், Super Steady OIS தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் f/2.0 lens உடன் 48-megapixel main shooter அடங்கும். மென்மையான மற்றும் மங்கலற்ற வீடியோக்களை வழங்குவதற்கான கை அசைவுகளை மறுக்க கேமரா செயலியில் Super Steady mode உடன் இணைந்து Super Steady OIS அம்சம் செயல்படுகிறது என்று சாம்சங் கூறுகிறது. இதில் f/2.2 aperture மற்றும் 123-degree field of view உடன் 12-megapixel ultra-wide angle கேமராவும் சேர்ந்துள்ளது. close-up புகைப்படங்களை எடுக்க f/2.4 lens உடன் 5-megapixel macro கேமராவும் உள்ளது.
முன்புறத்தில் f/2.2 lens உடன் 32-megapixel செல்ஃபி கேமரா உள்ளது. Galaxy S10 Lite சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த போனில், அங்கீகாரத்திற்காக in-display fingerprint சென்சார் பொருத்தப்பட்டுள்ளது, ஆனால், முன் கேமராவும் face unlock-ஐ ஆதரிக்கு. இது 128GB இண்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது. இதனை microSD card வழியாக (1TB வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போன் 75.6 x 162.5 x 8.1mm அளவீட்டையும், 186 எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்