ஆகஸ்டில் அறிமுகமாகிறது சாம்சங்கின் 'கேலக்சி நோட் 10'!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 2 ஜூலை 2019 15:36 IST
ஹைலைட்ஸ்
  • நியூ யார்க்கின் புரூக்ளினில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது
  • இந்த நிகழ்வு இந்திய நேரப்படி ஆகஸ்ட் 8 அதிகாலை 1:30 மணிக்கு துவங்கும்
  • இந்த ஸ்மார்ட்போனின் விலை 1,100-1,200 டாலர்கள் வரை இருக்கலாம்

சாம்சங் நிறுவனம் இந்த கேலக்சி நோட் 10 ஸ்மார்ட்போன் குறித்து ஒரு டீசரை வெளியிட்டுள்ளது

சாம்சங் கேலக்சி நோட் 10 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம். அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 7 அன்று அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்ச்சியை நியூ யார்க்கில் ஏற்பாடு செய்துள்ளது சாம்சங் நிறுவனம். முன்னதாக இந்த நிறுவனம்,வெளியிட்டிருந்த டீசரின்படி இந்த ஸ்மார்ட்போன் 'இன்பினிடி ஓ டிஸ்ப்ளே' திரையை கொன்டிருக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனுடன் கேலக்சி நோட் 10+ மற்றும் கேலக்சி நோட் 10 Pro என இரண்டு ஸ்மார்ட்போன்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கேலக்சி நோட் 10 5G மாடலையும் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கேலக்சி ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு, ஆகஸ்ட் 7 அன்று நடைபெறவுள்ளது. நியூ யார்க்கின் புரூக்ளினுள்ள பார்க்லே மையத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.கிழக்கு நேரப்படி (ET) இந்த நிகழ்வு ஆகஸ்ட் 7-ன் மாலை 4 மணிக்கு துவங்கவுள்ளது. இது இந்திய நேரப்படி ஆகஸ்ட் 8 அதிகாலை 1:30 மணியாகும்.

சாம்சங் நிறுவனம், இந்த நிகழ்வு குறித்த ஒரு அழைப்பை வெளியிட்டுள்ளது. வழக்கம்போல, அந்த நிகழ்வில் எந்த தயாரிப்பு அறிமுகமாகப்போகிறது என்பது குறித்து எந்த தகவலும் உறுதியாக கூறப்படவில்லை. இருப்பினும், அந்த அழைப்பை வைத்து பார்க்கையில் சாம்சங் நிறுவனம் தன் கேலக்சி நோட் 10 ஸ்மார்ட்போனைதான் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சாம்சங் நிறுவனம் ஒரு டீசரையும் வெளியிட்டுள்ளது. அந்த டீசரை வைத்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 'இன்பினிடி ஓ டிஸ்ப்ளே' திரையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வெளியான தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனுடன் கேலக்சி நோட் 10+ மற்றும் கேலக்சி நோட் 10 Pro என இரண்டு ஸ்மார்ட்போன்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டுமின்றி சாம்சங் நிறுவனம் கேலக்சி நோட் 10 5G மாடலையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் குறித்து மேலும் வெளியான தகவலின்படி, சாம்சங் கேலக்சி நோட் 10 ஸ்மார்ட்போன் 6.28-இன்ச் அளவிலான திரையும், கேலக்சி நோட் 10+ மற்றும் கேலக்சி நோட் 10 Pro ஸ்மார்ட்போன்கள் 6.75-இன்ச் அளவிலான திரையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5G வசதி கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமராக்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

இந்த ஸ்மார்ட்போன் விலை குறித்து வெளியாகியுள்ள தகவலின்படி சாம்சங் கேலக்சி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை 1,100-1,200 டாலர்கள் (76,000-82,700 ரூபாய்) வரை இருக்கலாம் என கூறைப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஏப்ரல் மாத பிஎஸ் பிளஸில் லார்ட்ஸ் ஆஃப் தி ஃபாலன்,டோம்ப் ரைடர் மற்றும் ஸ்வார்ட் ஆர்ட் ஆன்லைன் கேம்கள் இணைகின்றன.
  2. கூகுள் AI ப்ரோ திட்டத்தில் கூடுதல் கட்டணமின்றி 5TB கிளவுட் ஸ்டோரேஜ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  3. DarkSword பாதிப்பை சரிசெய்ய, iOS 18-ல் இயங்கும் பழைய ஐபோன்களுக்கு ஆப்பிள் அவசர அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
  4. ரெட்மி நோட் 15 SE 5G இந்தியாவில் அறிமுகம்: 5,800mAh பேட்டரி, வேகன் லெதர் ஃபினிஷ்: விலை, சிறப்பம்சங்கள்
  5. Realme 16 5G இந்தியாவில் அறிமுகம்: 7,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா: விலை, சிறப்பம்சங்கள்
  6. விவோ V70 FE இந்தியாவில் அறிமுகம்: 7,000mAh பேட்டரி, 200MP கேமரா; விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  7. iQOO 15 Apex வண்ண விருப்பம் வெளியிடப்பட்டது, ஏப்ரல் 1 அன்று இந்தியாவில் அறிமுகம்
  8. ரியல்மி C100 5G: ஏப்ரல் அறிமுகம்!7000mAh பேட்டரி, 50MP கேமரா மற்றும் அதிரடி அம்சங்களுடன் கசிந்த விலை விவரங்கள்
  9. மெட்டா - ரே-பான் ஆப்டிக்ஸ் ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  10. அமெரிக்காவில் உள்ள கூகுள் AI அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு ஜிமெயிலின் 'AI இன்லாக்ஸ்' அம்சம் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.