Galaxy Note 10-ன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட watered-down பதிப்பான Galaxy Note 10 Lite-ஐ சாம்சங் அறிவித்துள்ளது. ஒரு கசிவுக்குப் பிறகு, Galaxy Note 10 Lite இறுதியாக மூன்று பின்புற கேமரா அமைப்பை பேக் செய்து அதிகாரப்பூர்வமாக சென்றுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, Galaxy Note 10 Lite-ன் விலை தொடர்பான விவரங்களை சாம்சங் இன்னும் அறிவிக்கவில்லை. இந்த போன், 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்டுகளில் வரும். இது Aura Glow, Aura Black மற்றும் Aura Red கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
Samsung Galaxy Note 10 Lite, pixel density of 394ppi உடன் 6.7-inch Full HD+ (1080 x 2400 pixels) Infinity-O Super AMOLED டிஸ்பிளேவை பேக் செய்கிறது. இந்த போன் S Pen stylus உடன் வருகிறது, இது Bluetooth Low-Energy (BLE standard) வழியாக இணைகிறது மற்றும் multimedia control, clicking a picture மற்றும் Air Commands போன்ற வழக்கமான அம்சங்களை வழங்குகிறது.
Galaxy Note 10 Lite, 10nm octa-core processor-ஆல் இயக்கப்படுகிறது. பிராசசரின் தயாரிப்பி சாம்சங் குறிப்பிடவில்லை. ஆனால், கசிவுகள் போனில் in-house Exynos 9810 பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கின்றன. இருப்பினும், Galaxy Note 10 Lite உள்ள செயலி சந்தைகளால் மாறுபடலாம் என்று சாம்சங் பிரதிநிதி எங்களிடம் கூறினார். அதாவது ஒரு ஸ்னாப்டிராகன் வேரியண்ட் pipeline-ல் நன்றாக இருக்கலாம். இந்த 10nm SoC-யானது 8GB RAM உடன் இணைக்கப்படுள்ளது.
Galaxy Note 10 Lite, டிரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது. இதன் பிரதான கேமரா Dual Pixel autofocus, f/1.7 lens மற்றும் OIS உடன் 12-megapixel சென்சாரைக் கொண்டுள்ளது. இது f/2.2 aperture உடன் 12-megapixel wide-angle கேமரா மற்றும் f/2.4 aperture மற்றும் OIS ஆதரவுடன் 12-megapixel telephoto lens ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக முன்புறத்தில், f/2.2 aperture உடன் 32-megapixel கேமராவைக் கொண்டுள்ளது.
Galaxy Note 10 Lite-ல் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவுடன் 4,500mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவருகிறது. இந்த போனில் அங்கிகாரத்திற்காக in-display fingerprint சென்சாரும் உள்ளது. இது 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்குகிறது. இதனை, microSD card வழியாக (1TB வரை) விரிவாக்கக்கூடியது. இந்த போன் 76.1 x 163.7 x 8.7mm அளவீடையும், 199 கிராம் எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்