Samsung Galaxy Note 10 Lite இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த போன் ஏற்கனவே நமக்குத் தெரிந்தபடி, கடந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy Note 10-ன் toned down பதிப்பாகும்.
இந்தியாவில் Samsung Galaxy Note 10 Lite-ன் 6GB + 128GB மாடலின் விலை ரூ. 38,999-யாகவும், அதன் 8GB + 128GB மாடலின் விலை ரூ. 40,999-யாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த Samsung போன் Aura Glow, Aura Black மற்றும் Aura Red கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். முன்பதிவு இன்று மதியம் 2 மணிக்கு திறக்கப்படுகிறது. இது பிப்ரவரி 3 முதல் அனைத்து முக்கிய ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக விற்பனைக்கு வரும்.
டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy Note 10 Lite, 20:9 aspect ratio மற்றும் pixel density of 394ppi உடன் 6.7-inch Full HD+ (1080 x 2400 pixels) Infinity-O Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 6GB மற்றும் 8GB RAM உடன் இணைக்கப்பட்டு 2.7GHz Exynos 9810 octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. இது 128GB இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை microSD card வழியாக (1TB வரை) விரிவாக்கம் செய்யலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, Galaxy Note 10 Lite-ன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு Dual Pixel autofocus, f/1.7 lens மற்றும் OIS உடன் 12-megapixel பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இதற்கு f/2.2 aperture உடன் 12-megapixel wide-angle கேமரா மற்றும் f/2.4 aperture மற்றும் stabilisation-க்கு OIS உடன் 12-megapixel telephoto lens ஆகியவை உதவுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக, முன்புறத்தில் f/2.2 aperture உடன் 32-megapixel கேமராவைக் கொண்டுள்ளது.
Galaxy Note 10 Lite சூப்பர்-ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 4,500mAh பேட்டரி பொருத்தப்பட்டு வருகிறது. இந்த போன் in-display fingerprint ஸ்கேனரைக் கொண்டுள்ளது மற்றும் S Pen stylus built-in உடன் வருகிறது. இந்த stylus, Bluetooth Low-Energy (BLE standard)-ஐ அதரிக்கிறது. மேலும், வழக்கமான தொகுப்புகளின் அம்சங்களான multimedia control, clicking a picture மற்றும் Air Commands ஆகியவற்றுடன் வருகிறது. இந்த போன் 76.1 x 163.7 x 8.7mm அளவீடையும், 199 கிராம் எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்