Samsung Galaxy Note 10 Lite இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. Galaxy Note 10-ன் watered down பதிப்பான இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Galaxy Note 10 மற்றும் Galaxy Note 10+ஐப் போலவே, Galaxy Note 10 Lite-ம் S Pen உடன் வருகிறது மற்றும் Infinity-O டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் Samsung Galaxy Note 10 Lite-ன் 6GB RAM ஆப்ஷனின் விலை ரூ. 38,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் 8GB RAM வேரியண்ட் ரூ. 40,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களும் Aura Black, Aura Glow மற்றும் Aura Red கலர் ஆப்ஷன்களில் வருகின்றன. Galaxy Note 10 Lite, Samsung India online store மற்றும் நாட்டின் பல்வேறு ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் வாங்குவதற்கு கிடைக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட முக்கிய இ-காமர்ஸ் தளங்கள் மூலமாகவும் இது விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy Note 10 Lite-ன் விற்பனை சலுகைகளில், சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மூலம் பொருந்தக்கூடிய ரூ. 5,000 கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடி அடங்கும். மேலும், வாடிக்கையாளர்கள் Bajaj Finserv வழியாக மாதம் 3,249.92-ல் தொடங்கக்கூடிய no-cost EMI ஆப்ஷன்களைப் பெறலாம்.
டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy Note 10 Lite, One UI 2.0 உடன் Android 10-ல் இயங்குகிறது. இது 20:9 aspect ratio உடன் 6.7-inch Full HD+ (1080 x 2400 pixels) Infinity-O Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 6GB மற்றும் 8GB RAM ஆப்ஷன்களுடன் இணைக்கப்பட்டு octa-core Exynos 9810 SoC-யால் இயக்கப்படுகிறது. போனின் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் f/1.7 lens மற்றும் Optical Image Stabilisation (OIS) உடன் 12-மெகாபிக்சல் முதன்மை சென்சார் அடங்கும். இதன் கேமரா அமைப்பில், wide-angle f/2.2 lens உடன் 12-மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் f/2.4 lens உடன் 12-மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவை உள்ளன. மேலும், இந்த ஸ்மார்ட்போன் f/2.2 lens உடன் a 32-மெகாபிக்சல் செல்பி கேமராவும் எஃப் / 2.2 லென்ஸும் உள்ளன.
Samsung Galaxy Note 10 Lite, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை microSD card slot வழியாக (1TB வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போன் S Pen stylus உடன் தொகுக்கப்பட்டுள்ளது. இது Bluetooth Low-Energy (BLE) இணைப்பைக் கொண்டுள்ளது. இது Air Actions மற்றும் Screen Off Memo போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது.
Galaxy Note 10 Lite,சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் in-display fingerprint சென்சாரைக் கொண்டுள்ளது. தவிர, இந்த போன் 163.7x76.1x8.7mm அளவீட்டையும் 199 கிராம் எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்