சூப்பர் டூப்பர் வசதிகளுடன் அதிரடியாக களமிறங்கும் Samsung Galaxy M31s

சூப்பர் டூப்பர் வசதிகளுடன் அதிரடியாக களமிறங்கும் Samsung Galaxy M31s

சாம்சங் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் கேலக்ஸி M31 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள நிலையில், தற்போது கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யுள்ளது.

ஹைலைட்ஸ்
  • இதில் 6,000mAh பேட்டரியும், 25W சார்ஜரும் வழங்கப்படுகிறது
  • பின்புறத்தில் மட்டும் நான்கு கேமராக்கள் வழங்கப்படுகிறது
  • கேலக்ஸி M31s ஸ்மாடர்போனில் எக்ஸினோஸ் 9611 SoC பிராசசர் உள்ளது
விளம்பரம்

சாம்சங் நிறுவனம் 6,000mAh பேட்டரி, 64MP கேமராவுடன் சூப்பர் டூப்பரான கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் உள்ள மற்ற சிறப்பம்சங்கள், விலை நிர்ணயம் உள்ளிட்ட முழு விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான சாம்சங், கடந்த பிப்ரவரி மாதம் கேலக்ஸி M31 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன் தொடர்ச்சியாக, இதே M சீரிஸில் தற்போது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது அந்நிறுவனம். இதற்கு Samsung Galaxy M31s என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்த கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சாம்சங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் ஆங்கில எழுத்து 'L' வடிவத்தில் நான்கு கேமராக்கள் இருக்கும். பிரைமரி கேமரா 64 மெகா பிக்சல் கொண்டது. இதில் ஒரே க்ளிக்கில் ஒரே நேரத்தில் பல போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுக்க முடியும். இதற்கு ஆதரவளிக்கும் வகையில் மூன்று கேமராக்கள் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் 6,000 mAh சக்தி கொண்ட பேட்டரியும், அதற்கு 25W சார்ஜரும் வழங்கப்படுகிறது. இது ரிவர்ஸ் சார்ஜ் முறையில் செயல்படுகிறது. டிஸ்பிளேவைப் பொறுத்தவரையில், பஞ்ச் ஹோலுடன், கண்ணைக் கவரும் அமோலேட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 6ஜிபி ரேமுடன், சாம்சங் எக்ஸினோஸ் 9611 Soc பிராசசர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சாம்சங்கின் இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை குறித்த விவரங்கள் அறிமுக நிகழ்ச்சியில் வெளியிடப்படும். இருப்பினும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை சுமார் 17,499 ரூபாய் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Why do Indians love Xiaomi TVs so much? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »