டிரிபிள் ரியர் கேமராக்களுடன் வெளியானது சாம்சங் கேலக்ஸி எம் 11...!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 30 மார்ச் 2020 15:28 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங் கேலக்ஸி எம் 11, ஆக்டா கோர் SoC-யால் இயக்கப்படுகிறது
  • இது 5 மெகாபிக்சல் வைட்-அங்கிள் கேமராவை 115 டிகிரி FOV-யுடன் கொண்டுள்ளது
  • இந்த போன் மூன்று வண்ணங்களிலும், ஒற்றை ஸ்டோரேஜ் வேரியண்டிலும் வருகிறது

சாம்சங் கேலக்ஸி எம் 11, 6.4 இன்ச் எச்டி + (720 x 1560 பிக்சல்கள்) டிஸ்பிளேவை வழங்குகிறது

சாம்சங்கின் புதிய கேலக்ஸி எம் 11 அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் கேலக்ஸி எம்-சீரிஸ் வரிசையில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனாகும். புதிய சாம்சங் போன் டிரிபிள் ரியர் கேமராக்கள் அமைப்பைக் கொண்டுள்ளது.இந்த போன், 15W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.


சாம்சங் கேலக்ஸி எம் 11 விலை:

Galaxy M11, சாம்சங் UAE இணையதளத்தில் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், அதன் விலை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. Samsung Galaxy M10s-ன் விலைக்கு  நிகராக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. வலைத்தள பட்டியலின் படி, கேலக்ஸி எம் 11 மாதிரி எண் SM-M115F மற்றும் பிளாக், மெட்டாலிக் ப்ளூ மற்றும் வயலட் கலர் ஆப்ஷன்களில் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 11 13 மெகாபிக்சல் முதன்மை மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி ஸ்னாப்பரைக் கொண்டுள்ளது

சாம்சங் கேலக்ஸி எம் 11 விவரங்கள்:

 டூயல்-சிம் (நானோ) Samsung கேலக்ஸி எம் 11, Android 10 அல்லது Android Pie-யில் இயங்குகிறதா என்று குறிப்பிடப்படவில்லை. இந்த போன் 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா கோர் SoC-யில் இயங்குகிறது. ஆனால், சிப்செட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 என்று தெரியவில்லை. சாம்சங் கேலக்ஸி எம் 11, 6.4 இன்ச் எச்டி + (720 x 1560 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 11 இன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில், எஃப் / 1.8 aperture உடன் 13 மெகாபிக்சல் பிரதான ஸ்னாப்பர் உள்ளது. இது எஃப் / 2.4 aperture உடன் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் எஃப் / 2.2 aperture  மற்றும் 115 டிகிரி பார்வையுடன் 5 மெகாபிக்சல் வைட்-அங்கிள் கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ க்களுக்கு, எஃப் / 2.0 aperture உடன் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

கேலக்ஸி எம் 11 32 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்குகிறது. இதனை, மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) மேலும் விரிவாக்கக்கலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, க்ளோனாஸ், பீடோ மற்றும் கலிலியோ ஆகியவை உள்ளது. கேலக்ஸி எம் 11, 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. அங்கீகாரத்திற்காக பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் 161.4x76.3x9.0 மிமீ அளவு மற்றும் 197 கிராம் எடைக் கொண்டதாகும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜேபிஎல் லைவ் 780என்சி விமர்சனம்: ஒரு முழுமையான தொகுப்பா?
  2. ஆகஸ்ட் 11 வெளியீட்டிற்கு முன்னதாக ரெட்மி K100 ப்ரோ மேக்ஸின் முக்கிய விவரக்குறிப்புகள், அம்சங்கள் கசிந்துள்ளன
  3. ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்: நத்திங் ஃபோன் 4a சீரிஸ், ரெனோ 15 சீரிஸ், மேலும் பல தள்ளுபடியில் வழங்கப்படும்
  4. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: சியோமி பேட் 7, ஒன்பிளஸ் பேட் 2, ரெட்மி பேட் 2 மற்றும் பலவற்றில் சிறந்த சலுகைகள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 40,000-க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள் அறிவிப்பு
  6. சோனி WH-1000XM6 இப்போது இந்தியாவில் ஆலிவ் கிரே வண்ணத்தில் கிடைக்கிறது: விலை, கிடைக்கும் இடம், அம்சங்கள்
  7. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்பிளஸ் 15 சலுகை இது
  8. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026: ரூ. 20,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள்!
  9. ரியல்மி 16x 5G பற்றிய தொகுப்பு: வெளியீட்டுத் தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  10. Poco M8 Power vs OnePlus Nord CE 6 Lite vs Moto G77 Power: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.