தனது மிக முக்கிய தயாரிப்புகளான கேலக்ஸி எம் வகை ஸ்மார்ட்போன்களை அமேசான் மூலம் இன்று சாம்சங் வெளியிட்டது. வெளியான சாம்சங் எம் 10 மற்றும் சாம்சங் எம் 20 சற்றும் எதிர்பாராத முதல் நாள் விற்பனையை செய்து அசத்தியுள்ளது.
சுமார் எத்தனை யுனிட் போன்கள் இதுவரை விற்றுள்ளது என்ற தகவலும் எவ்வளவு நேரத்தில் விற்பனையாகியுள்ளது என்ற தகவலும் இன்னும் வெளியாகாத நிலையில் அமேசான் நிறுவனம் ‘சோல்ட் அவுட்' அறிவிப்பை எம்- வகை போன்களுக்கு வைத்துவிட்டது.
அதைதொடர்ந்து இனி வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மீண்டும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிவிரைவு சார்ஜிங் டெக்னாலஜி, பேட்டரி பவர் மற்றும் இன்ஃவ்னையிட் வி டிஸ்பிளே போன்ற சிறப்பு அம்சங்களுடன் இந்த எம் வகை போன்கள் வெளியாகியுள்ளது.
தொடக்க சேலான இன்று கேலக்ஸி எம் 10 மற்றும் கேலக்ஸி எம் 20 போன்களை சொந்தமாக்கி கொள்ள பலரும் சாம்சங்.காம் மற்றும் அமேசான்.இன் என்னும் வலைதளங்களுக்குள் நுழைய முடிவெடுத்துள்ளனர். இப்படி துவக்க விழாவே அதிர்ந்து விட்டதால் ‘எங்களுக்கு தந்த வரவேற்புக்கு மிக்க நன்றி' என நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
சாம்சங் கேலக்ஸி எம் 10 மற்றும் கேலக்ஸி எம் 20 போன்களின் விபரங்கள் :
ரூபாய் 10,990 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேலக்ஸி எம் 20 வகை ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 8.1 ஓரியோவில் இயங்குகிறது. 6.3 இஞ்ச் உயரம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இன்ஃவ்னையிட் வி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மேலும் எக்நாஸ் 7904 எஸ்.ஓ.சி மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 13 மெகாபிக்சல் ஆரம்ப சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் செஃல்பி சென்சாருடன் வெளியாகிறது. 5000mAh பேட்டரி பவருடன் வெளியாகியுள்ள சாம்சங் எம்20 ஸ்மார்ட்போனின் விலை பட்டியல் பொருத்தவரை 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூபாய் 10,990 க்கும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி நினைவகம் கொண்ட சாம்சங் கேலக்ஸி வகை ஸ்மார்ட்போன் 12,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சற்று சிறிதாகவே தோற்றமளிக்கும் சாம்சங் எம்10 வகை ஸ்மார்ட்போன் 6.2 இஞ்ச் அளவுடையது. அண்ட்ராய்டு 81. ஓரியோ மூலம் செயல்படும் இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் வகைகளில் கிடைக்கிறது.
இரண்டு கேமராக்கள் உள்ள நிலையில் 13 மெகா பிக்சல் கொண்ட முதற்கட்ட சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை சென்சாரும் அமைந்திருக்கும். 3,400mAh பேட்டரி பவர் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி நினைவகம் கொண்ட மாடல் சுமார் 7,990 ரூபாய்க்கும்.
3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூபாய் 8,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்தக்கட்ட கேலக்ஸி எம் வகை சேல் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி 12 மணிக்கு சாம்சங்.காம் மற்றும் அமேசான்.இன் ஆகிய வலைதளங்களில் விற்பனை துவங்கும்.
Written with inputs from IANS
Are Samsung Galaxy M10 and Galaxy M20 better than budget phones from Redmi, Realme, and Asus? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்